1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2021

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!

 


தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர் தேர்ச்சி:

 தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மற்ற 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். ஆனால் இந்த ஆண்டில் பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டை பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்க வாய்ப்புகள் குறைவு.


இந்த கல்வியாண்டில் 75% வேலைநாட்கள் முடிவடைந்த நிலையில் இனிமேல் பள்ளிகளை திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்துவது கடினம், மேலும் உருமாறிய கொரோனா காரணமாகவும், தடுப்பூசிகள் குறித்த புரிதல் போன்ற காரணங்களால் பள்ளிகள் திறந்தாலும் 5 முதல் 12 வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை. எனவே மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்ச்சி வழங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

8 comments:

  1. Nalla plan pandranga part time teacher Tha ini 11 and 12 ku cs ku class eduka veandum ..but job conform Panna matranga cm election la engaloda power ennanu kata porom

    ReplyDelete
    Replies
    1. adei part time paithiyam... vera velaiye ungaluku illaya...

      Delete
  2. Dai kumar neega close pannuga naga edha sonnalum unnaku enna...first unnoda work paru engalukunu oru association irruku pathiram...thuki ulla potrom...

    ReplyDelete
  3. ஆசிரியர்களைப் பற்றி ஆசிரியர்களே கேவலப் படுத்தும்போது அரசியல்வாதிகள் கேவலப்படுத்துவதில் தவறு இல்லை பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்தே நம்மிடம் ஒற்றுமை என்பதே இல்லை என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்

    ReplyDelete
  4. Good news for 1 to 9 std students.
    www.tiyenn.com

    ReplyDelete
  5. Nice but part time teachers ellarom navanga sir but oru silar eppadi pesaranga avargaluku Kadum kandanam

    ReplyDelete
  6. Idhula comments podra yarum part time teacher illa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி