தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்! - kalviseithi

Jan 26, 2021

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்!

 


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மாதந்தோறும் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.200 உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400 உதவித்தொகையும் , பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.


மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அதனை புதுப்பிக்க வேண்டும். 

9 comments:

 1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
 2. இப்போது ஏன் தமிழ்நாடு அரசு , விளம்பரத்திற்காக 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது??????????? இந்த பணம் ஏழை மக்கள் வரி பணம். இப்போது மக்கள் கொரோனா காரணமாக அன்றாட வாழ்க்கைக்காக போராடுகிறார்கள், ஆனால் அரசாங்கம் தேவையின்றி செலவிடுகிறது
  ., தமிழ்நாடு மக்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் அரசாங்கத்தின் விளம்பரங்களைப் பார்ப்பதை வெறுக்கிறார்கள், ஏனெனில் 10 ஆண்டுகளில் (2011-2021) இருந்து வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு அரசு எதுவும் செய்யவில்லை

  ReplyDelete
  Replies
  1. Ithu already irukara scheme than yarukum theriyathu avlo than

   Delete
 3. நான் 10 ஆம் வகுப்பு வாங்கினேன் இப்போது பட்டபடிப்பு முடித்து 5வருடம் ஆகிவிட்டது நான் இதற்க்கு தகுதி பெற்றவரா

  ReplyDelete
  Replies
  1. Degree படிப்பை முடித்து பதிவு செய்து five years,
   முடிந்து இருந்தால் கிடைக்கும்

   Delete
 4. Pls can anyone tell website address

  ReplyDelete
 5. போங்கடா நீங்களும் உங்க திட்டமும் 50000 கம்மியா வருமாணம் இருக்கணும் ஆன யாருக்கும் மணியக்கார் வருமாண சாண்றிதழ் தரமாட்டாங்க அப்ப எதுக்கு இந்த திட்டம்

  ReplyDelete
 6. Athukuda 3 varusayhukku than apram kidayatha

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி