பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2021

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள்!

 

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத மாணாக்கர்க்கு வயது தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


SSLC AGE RELAXATION REG - Download here...

2 comments:

  1. மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்கள் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.

    ReplyDelete
  2. மிகச் சரியான பதிவு.அரசுக்கு கண்டனம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி