1500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2021

1500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.


அரசு உதவிபெறும் பள்ளி 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்..!

 ஆசிரியர்கள் சங்கம் பள்ளிகள் ஆசிரியர்கள் முதல் அமைச்சர் அரசு

சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் போன்று புத்தாக்கப்  பயிற்சியை  அரசு உதவிபெறும் பள்ளி 1500 ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்து ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, மாநிலத்தலைவர்

பி.கே.இளமாறன் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது:  கட்டாயகக்கல்வி உரிமைச்சட்டம் 2009 

RTE Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் RTE அமலாக்கம்  அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.


அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனக்கூறி ஊதியம் தவிர மற்ற எந்த பணப்பயனுமின்றி தவித்துவருகின்றார்கள்.தற்போது மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் DIET மூலம் புத்தாக்கப் பயிற்சி இம்மாதம் கொடுத்து TET தேர்விலிருந்து விலக்களிக்க ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.அதுபோன்று அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி உதவுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறேன்.


23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிதல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்ததால்  தற்போது வரை சுமார் 1500ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க, TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் பத்து ஆண்டுகள் பணிநிறைவு பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும்,  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.


தற்போது 23/08/2010 முதல் தற்போது வரையிலான காலகட்டம் மொத்தமாக பத்து ஆண்டுகள் நிறைவுற்றதால் தேர்வு நிலை ஆசிரியர்களாக தரம் உயர்கின்றனர். வளரூதியம், ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஊதியப் பலன்கள் நிறுத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தும் கூட, மாநிலம் முழுவதும் சமமற்ற முறையில் தரப்படுகின்றன. பெரும்பாலான ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் தகவல்கள் இன்றி தேங்கி நிற்கின்றன. உயர்கல்வி படிக்ககூட அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள். ஆகவே விரைவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கருணை அடிப்படையில்  நல்ல அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.


RTE - TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் உள்ள 1500 ஆசிரியர்களுக்கும்  விரைவில் ஆன்லைன் மூலம், சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு   அனிப்பது போல அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TET புத்தாக்கப்பயிற்சி அளித்து TET.  தேர்விலிருந்து முழுவதும் விலக்கு அளித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காப்பாற்ற ஆவனசெய்யவேண்டி மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


13 comments:

  1. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
    தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
    ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

    ReplyDelete
  2. சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பணப்பலன்கள் மறுக்கப்படுகிறது

    ReplyDelete
  3. ஆசிரியர் சங்கம் ஒரு சிறிய கோரிக்கை நாங்கள் தனியார் பள்ளிகளில் 6000,7000 ரூபாயில் பணி செய்து கொண்டு இவ்வளவு கஷ்டத்திலூம் கடின உழைப்பில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோம். கடந்த 7ஆண்டுகளாக பணியின்றி தவித்து கொண்டு வருகின்றோம்.எங்கள் உடைய கஷ்டம் உங்களுக்கு தெரியவில்லையா

    ReplyDelete
  4. எதற்காக தகுதி தேர்வில் இருந்து விலக்கு, தகுதிதேர்வையே இவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் இவர்கள் பயிற்றுவிக்கும் மாணவர்களின் நிலை

    ReplyDelete
    Replies
    1. Good. 2013 2017 2019 tet examla pass panni irkkalam. Ivangalukku pathil tet pass panavagalukku posting podalam.சிறுபான்மை பள்ளியாக இருந்தாலும் அரசு உதவி பெறும் பள்ளிகளியாக இருந்தாலும் tet pass panavagalal mattum than posting Full panna vendum

      Delete
  5. Replies
    1. Ellorum summa thaan irukkom

      Neengalum irunthuttu ponga

      Delete
  6. Mass என்பவரின் கருத்து ஏற்புடையது அல்ல, அவர்களுக்கு அரசு தேர்வு வைக்கட்டும், அவர்கள் திறனை நிரூபிக்கட்டும், இல்லையேல் மக்கள் வரிப்பணம் அரசாங்கத்தால் வீணடிக்கப்படுகிறது..

    ReplyDelete
  7. சிறுபான்மை பள்ளியாக இருந்தாலும் அரசு உதவி பெறும் பள்ளிகளியாக இருந்தாலும் அனைவருக்கும் சம நீதி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  8. சிறுபான்மை பள்ளியாக இருந்தாலும் அரசு உதவி பெறும் பள்ளிகளியாக இருந்தாலும் அனைவருக்கும் சம நீதி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  9. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அறிவு இல்லை.
    இதுங்களுக்கு புத்தாக்க பயிர்ச்சி கொடுத்துட்டு சும்மா விட்டுடனுமாம்.

    அப்ப ஒரு முறை இரண்டு முறைன்னு TET பாஸ் பன்னிட்டு வேலை கிடைக்குமான்னு ஏங்கிகிட்டு இருக்க எங்க நிலை?

    தகுதி இல்லாத இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு
    தகுதி பெற்ற பல்லாயிரம் பேரில் சிலருக்காவது அந்த பணி வாய்ப்புகளை வழங்குவது தான் தர்மம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி