அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணி: ஜன.2, 3-ல் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2021

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணி: ஜன.2, 3-ல் கலந்தாய்வு.

 


அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 742 பேருக்கு 2 நாட்கள் கலந்தாய்வு  நடைபெற உள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிக்கு முதன் முதலாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான கலந்தாய்வு ஜன.2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது.


இந்தப் பதவிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 742 பேர் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து 742 பேருக்கும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரிசை எண் 1 முதல் 400 வரை இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 2 ஆம் தேதியும் வரிசை எண் 401 முதல் 742 வரை இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வர்களின் கல்விச் சான்றிதழ்களைக் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

7 comments:

  1. Dharmam vendrdhu ....oru nai naa idha eppa sonnalum comments pannuvanay..enga thambi irruka..olunga unmaiya padi

    ReplyDelete
  2. Congratulations
    to all the teachers🌹🌹

    ReplyDelete
  3. Total-(742)ஆண்-155(20.89%) பெண்கள்-587(79.11%) இந்த நாட்டில் ஆண்களுக்கு வேலை கிடையாதா. சரிசம இடஒதிக்கீடு கொடுங்க (50%:50%)

    ReplyDelete
  4. You have any doubt call to trb

    ReplyDelete
    Replies
    1. Sir which subject you are? Why do you false things, already we joined coaching centres,

      Delete
  5. Sir really, you are only always say this but some people say trb board said no, I tried many times but they are not picking, don't say lie sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி