அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2021

அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.

 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக , 2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at School level ) என்ற தலைப்பில் , பார்வை 1 - இன்படி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் 6,173 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , 31,297 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் , 19.01.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை 1 இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி , விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளிகளிடமிருந்து பெற்று 20.01.2021 ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்தின் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி