மாநிலம் முழுவதிலும் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள் - kalviseithi

Jan 7, 2021

மாநிலம் முழுவதிலும் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்


மாநிலத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி மீண்டும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பல மாவட்டங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. 


பெலகாவி மாவட்டத்தில் அதிகப்படியாக 22 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவர்களிடம் பாடம் படித்த மாணவர்கள் மற்றும் உடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள கடூலி கிராமத்தில் உள்ள பள்ளி மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் 4 ஆசிரியைகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 7 பள்ளிகள் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது என மாவட்ட கல்வித்துறை அதிகாரி ரவிசங்கர் ரெட்டி தெரிவித்தார். இதேபோல் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவின் பெலிகான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வீட்டு தனிமையில் இருக்க பரிந்தரைக்கப்பட்டுள்ளனர் என விஜயபுரா மாவட்ட கலெக்டர் பி சுனில் குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ``ஆசிரியருக்கு அறிகுறி இன்றி தொற்று பாதித்துள்ளது. இதனால் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 


தொடர்ந்து அவர் வித்யகாமா திட்டத்தின் கீழ் படித்த 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர். எனவே இவருடன் பணியாற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். சிக்கமகளூரு மாவட்டத்தில் வெவ்வேறு பள்ளிகளில் 4 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், `மூடிகெரே, கடூர் மற்றும் சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுவருகிறது தெரிவித்தார்’’. இதேபோன்று குடகு மற்றும் ஷிவமொக்கா மாவட்டத்திலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


இதுகுறித்து சுகாதாரத்துரை அமைச்சர் சுதாகர் கூறுகையில், கொரோனா தொற்று பரவலால் பொதுமக்கள் யாரும் பீதி அடையத்தேவையில்லை. நாங்கள் மாணவர்கள் குணமடைய சிறப்பான சிகிச்சைகள் வழங்குவோம். இதற்கு பொதுமக்கள் ஒதுழைப்பு தரவேண்டும் என்றார். கொரோனா தொற்று பரவலால் பொதுமக்கள் யாரும் பீதி அடையத்தேவையில்லை. அரசுதரப்பில், மாணவர்கள் குணமடைய சிறப்பான சிகிச்சைகள் வழங்குவோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

12 comments:

 1. இது போன்ற செய்தியைப் பதிவிடாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இன்னும் எத்தனை வருடங்கள் இதுபோல் சொல்லிக் கொண்டே இருக்கப்போகின்றீர்கள்.

  ReplyDelete
 2. ஆமாம், பள்ளி திறக்க ஆலோசனை கூட்டம் நடக்கும்போது மட்டும் கொரோனா தோற்று பரவுகிறது என்று செய்தி வெளியிடுவது ஏன் என தெரியவில்லை.

  ReplyDelete
 3. Dai kalviseiyhiya illa loosu seithiyada ????? Muttal

  ReplyDelete
 4. முன்பெல்லாம் கல்விச்செய்தி வலைதளத்தில் பதிவிடப்படும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் சார்ந்த செய்திகளைப் படிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கும்.

  ஆனால் தற்பொழுது வரும் விளம்பரங்கள் வாசிப்பதைச் சற்றே சலிப்படையச் செய்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. விளம்பரங்கள் இல்லாமல் இருந்தால். வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் எப்படி கிடைக்கும்...?

   Delete
 5. Police, doctors, bank employees, pwd, highways and so on ivangalukku vanda corona seithi irukka

  ReplyDelete
  Replies
  1. ஒயின்ஷாப் ஊழியர்களுக்கும் குடிமகன்களுக்கும் வராத கொரோனா பள்ளிக்கூடம் திறந்தால் மட்டும் வந்துவிடும்

   Delete
  2. School thirandhu students ku corona vandhu yedhum ana govt porupila nu soina apo theriyum

   Delete
 6. மூடுங்கப்பா எல்லாரும் உலகேமே இருட்டாயிடும் பிரச்சனேயே இருக்காது.

  ReplyDelete
 7. Kalviseithi is getting worse day by day

  ReplyDelete
 8. Definitely it will affect Tamilnadu school after opening... most of people are suggesting after vaccine only its possible to reopening school.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி