ஐஐஎம் கேட் நுழைவுத் தேர்வு : இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியீடு - kalviseithi

Jan 1, 2021

ஐஐஎம் கேட் நுழைவுத் தேர்வு : இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியீடு

 


ஐஐஎம் - கேட் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டி யல் வெளியாகியுள்ள நிலையில் , தேர்வு முடிவுகள் விரைவில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேர ' கேட் ' எனப்படும் பொது நுழைவுத்தேர்வில் ( தேர்ச்சி பெற வேண்டும் . அதன்படி நிகழாண்டுக்கான ' கேட் ' தேர்வு , நாடு முழுவதும் நவ .29 - ஆம் தேதி நடைபெற்றது . இந்தத் தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் 3 ஷிஃப் டுகளில் சுமார் 2 லட்சம் பேர் தேர்வெழுதினர் . கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும் பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டன . இதுகுறித்து ஐஐடி இந்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “ பாட நிபுணர் குழு மேற்கொண்ட கவனமான ஆய்வில் முதல் மற் றும் மூன்றாவது ஷிஃப்டு கேள்வித்தாள்களுக்கான விடைகளில் எந்த மாற்றமும் இல்லை . எனினும் இரண்டாவது ஷிஃப்ட்டில் ஒரு ( கேள்விக்கான விடை மாற்றப்பட்டுள்ளது . https : //iimcat.ac.ii என்ற இணையதளத்தில் விடைத்தாள் பட்டியலைக் காணலாம் ' என ( தெரிவிக்கப்பட்டுள்ளது . ஐஐஎம்- கேட் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியா னதைத் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் கேட் தேர்வு முடிவுகள் ( வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி