பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2021

பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.


 கொரோனா காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறியவும், அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* பள்ளியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்களை அடையாளம் காண வீடு தோறும் சென்று கணக்கெடுக்க வேண்டும். 

* புலம் பெயர்ந்துள்ள குடும்பத்தாரின் குழந்தைகள் தற்போது பள்ளிக் கல்வியை நிறுத்துவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவர்களைக் கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

* பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். 

* மாணவர் சேர்க்கையின்போது காலதாமதம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தவும், இந்த ஆண்டு கல்வியை நிறுத்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது.

* கல்வித்தரம் பாதிக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள், சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு போன்றவை மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

* சிறு கிராமப்புறங்களில் நடமாடும் வகுப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம்.

* பள்ளி பாடங்கள் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு, படைப்பாற்றலையும், பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையும், எண்கள் தொடர்பான அறிவையும் மாணவர்களிடம் உருவாக்குவது இன்றைய தேவை.

1 comment:

  1. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
    தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
    ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி