பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை: கோபியில் பரபரப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2021

பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை: கோபியில் பரபரப்பு.

 Source: தமிழ் முரசு


கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டை வீட்டை தகுதி தேர்வில் வெற்றிப்பெற்ற ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 4,500க்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்தனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் 2013ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (மதிப்புகாண்) வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

ஆனால் பெரும்பாலானோருக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. தகுதிகாண் அடிப்படையில் நியமனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்குள் நியமனம் கிடைக்காவிட்டால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டி வரும் என்பதால் தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு கடந்த 7 ஆண்டுக்குள் நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது ஆசிரியர் தகுதி கேள்விக்குறியானது. விதிவிலக்கு அளித்து, முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், என்று தேர்ச்சி பெற்றவர்கள் கோரி வந்தனர். 

ஆனால், தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் கடந்தும், அவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அளவில் ஒருங்கிணைந்து, இன்று கோபியிலுள்ள அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, நியமனம் வழங்க கோர முடிவெடுத்தனர். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்ற ஆண், பெண்கள் பல்வேறு மற்றும் பஸ்களில் இன்று காலை கோபி வந்தனர். அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர், அவர்கள் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதை தடுக்கும் நோக்கில், கோபி - சத்தி பிரதான சாலையிலுள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் வாகன சோதனை நடத்தினர். 

அமைச்சர் வீட்டிற்கு வரும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரையும் அங்கு நிறுத்தி வைத்து, அமைச்சர் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லை. ஒரு சிலர் மட்டும் அமைச்சரை சந்தித்து முறையிடலாம் என்றனர். இதற்கு வந்திருந்தவர்கள் ஏற்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களும் இருந்ததால், அவர்கள் அவதியடைந்தனர். அமைச்சர் தங்களை வந்து சந்திக்க வேண்டும், கோரிக்கை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும், இல்லாவிட்டால் இங்கேயே காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம், என்றனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து தேர்ச்சிபெற்றவர்கள் கூறுகையில், ‘‘அரசு பணிநியமனம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பினால் தனியார் பள்ளி வேலைக்கும் செல்லவில்லை. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு முறையாக எங்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் பாதிக்கப்படுவோம். அமைச்சர் செங்கோட்டையன் தங்களை சந்திப்பார் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்’’ என்றனர்.

43 comments:

  1. 2013, 2017, 2019
    3perum pathikatha vakail Pani niyamanam valanga veandum.

    Melum 2,3 Murai thakuthi theatvil
    Pass Pannavangaluku kandipa munurimai koduthu

    Pani aanai valanka veandum,
    2013,2017,2019, 3tet pass Pannavanga rompa Peru erukanga

    But government only press meet Mattum than tharuthu
    Posting podratha pathi suthama think Panna mattanga.

    ReplyDelete
    Replies
    1. True.2013,2017,19 padhikkadha muraiyil niyamanam vendum.3 tet pass seithavargalum niraiya per ullanar.

      Delete
  2. Already minister told about 2013 batch

    ReplyDelete
  3. Part time teacher nambalum porda veandum plz ..apo Tha solution kidikum ...unna viradham irruka veandum..

    ReplyDelete
    Replies
    1. Apo naangalam kadaisi varaikkum ipdithan irukkanum .. nogama velaikku poiruvinga... talent irundha pass panni po

      Delete
    2. இங்கு பகுதிநேர ஆசிரியர்களை பற்றி நகைபவர்களுகு அவர்களது வாழ்வாதாரம் வாழ்க்கைச் சூழல் பற்றி யாருக்கும் தெரியாது, மேலும் 40 வயதை கடந்த எத்தனையோ பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு தினமும் போராடி வருகின்றனர். புண்படும் வகையில் கருத்துக்களை பகிர வேண்டாம்

      Delete
    3. Tq your support from part time teacher..nambala palaperu nakkal pandranga namba evalvlau kastam padrom nu yarukumay theriyamattudhu..plz edhvdhu pannalam namukunu oru association thalivar veandum adhuku edhvdhu try pannuga..

      Delete
    4. Are you part time teacher???
      Because avanga association vacherukanga state level leaderum erukanga, protest kooda last month minister Kitta pannanga

      Ethukooda theriyama nee epadi
      Part time teachera erukamudiyum

      Delete
    5. Idha yaravdhu soluvanga nu Tha indha cooments ....irrudhu enna use ketkara avanava kandapadi pesitu irruka 42 age atchu avalvu Tha ini trb exam eludhavum mudiydhu enna pannitu irrukaru namba thalivaru ketkara..poratam panna veandum ..

      Delete
    6. Idhula comment podara person part time techer illa yela post la yum part time teacher and tet pass teacher ku la different comments potu problem panitu iruka

      Delete
    7. Dai jamesbond part time teacher and TET rendum onna naga kastapatu padichu pass agitu job ketkarom nee summavay job ketkara...mela comment potava part time teacher pathi mattum Tha pesuna nee edhuku TET ilukura....neeya oru comment podurdhu adhuku neeya reply pandrdhu ....

      Delete
  4. Special teachers reserved place நிரப்ப second list vara வாய்ப்பு இருக்கா sir

    ReplyDelete
  5. அரசு ஆள்பவர்கள் மக்களால் நியமிக்கப் பட்டவர்களே மக்களின் குறைகளை நேரில் வந்து காது கொடுத்து கேட்காதவர்கள் நிச்சயமாக மக்களின் பிரதிநிதியாக செயல்பட எந்த ஒரு தகுதியும் இல்லை.

    ReplyDelete
  6. அனைவரும் சேர்ந்து போராட வேண்டும்

    ReplyDelete
  7. Special teachers reserved place நிரப்ப second list vara வாய்ப்பு இருக்கா sir

    ReplyDelete
  8. Idhula part time full time nu illa tet pass panavaga.consolidated pay. Part time teacher part time lecturer and temporary nurse apadinu yelarum onnu serdha kandipa indha govt ku payam Varum 10 varusa atchila yedhum niradharam illa ana idha kekama vita ivaga atchi dha niradhara atchiya iruku matha yelam consolidated part time 5000 sambalam 7000 samabalam nu poi kadasila 100 days velai thitam nu teachers poduvaga inum orutharuku oruthar sanda podama onna poradalam.

    ReplyDelete
    Replies
    1. Yes true, 2013 first preference keatta 2017 kepanga, 2019 kepanga,

      So onna senthu poradunga,

      Illama eni Vara ellam temporary, part time nu poitea erupanga

      Delete
  9. Special teacher P.E.T 1;2 certificate verification candidate Ku second list Vara chance irrukka sir please tell about it sir

    ReplyDelete
  10. Tet 2013 paper 2 vla 100 marks eduthu irukka.indha murai posting kidaikumaa friends.pls reply

    ReplyDelete
  11. 2013????????????????????????? வேலை கொடு

    ReplyDelete
  12. Muthula exam vaithu posting podunga sir so knowledge ullavan job vangutum

    ReplyDelete
  13. Seniority eduthappo evargal santhosapattargal. Eppo ungalakku job vendum entru poraattam. Appo 15 years Mela wait panniyavangal seniority avargalukku thiramai ellaiyaa. Age factor did not get TET certificate but lot of experience they are having. TET only eligible for Teacher post just one certificate.

    ReplyDelete
  14. We don't have any rights to ask Compulsory job. TET is only eligible for Teacher post just like B.Ed courses

    ReplyDelete
    Replies
    1. You didn't you raise your voice against 2012. According to your words 2012 batches should not have got the job right. Plz already we are hurted lots. Count your words and throw sir.

      Delete
  15. Intha mathi teachers Elam onna commit avatharku ethathu group iruka.iruntha enaku sollunga.i'm 2013 Tet pass candidate pls

    ReplyDelete
  16. இவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல எனவே மக்களின் வேதனை இவர்களுக்கு புரியாது

    ReplyDelete
  17. இன்று ஒரு செய்தி வருகிறது இது உண்மையா? அமைச்சர் போட்டி தேர்வு மூலம் தான் படிப்படியாக பணி நியமனம் செய்யப்படும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியதாக..உச்ச நீதி மன்றத்தில் ஏதோ வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பணி நியமனத்தில் போட்டி தேர்வு முறை தான் கடைபிடிக்கபடும் என்று பேசியதாக தகவல்..தெரிந்தவர்கள் பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. Ama minister sonnarunu polimer news la pottanga

      Delete
    2. Ama minister sonnarunu polimer news la pottanga

      Delete
    3. Last 4years ah ithaiye than sollitu irukaru

      Delete
  18. Special teacher P.E.T 1;2 certificate verification candidate Ku second list Vara chance irrukka sir please tell about it sirReply

    ReplyDelete
  19. இந்த இடத்தில் யாருக்கும் special teachers பற்றி தகவல் தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.website பார்க்க வேண்டியதுதான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி