முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு? - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2021

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு? - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

 

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு என்பது பற்றி 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். பொறியியல்,கலை-அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும். மேலும் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு அறிமுக வகுப்புகள் நேற்று தொடங்கியது. தெர்மல் ஸ்கேன் உள்ளிட்ட கொரோனோ  தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் செய்த பின்னரே மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அறிமுக வகுப்புகள் நடைபெற்றன.


மேலும் 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணாக்கர்களுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. இன்னும் இரண்டே மாதம் பொருங்கள் ஐயா, 5 ஆண்டுகள் மந்திரியாக இருந்த நீங்கள் உயர்கல்வி துறையில் செய்த வை என்ன? அரசு கல்லூரியில் எண்ணற்ற பேராசிரியர் பற்றாக்குறை, பாலிடெக்னிக் முறைகேடு, அரசு கல்லூரியில் பணி நியமனமே 7 ஆண்டுகளாக இல்லை, படித்த இளைஞர்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்..

    ReplyDelete
  2. Ivargalai thorathinal matumey Nadu orupadum. Part time teacher.
    Part time lecturer.
    Part time sweeper.
    Temporary dr.
    Temporary nurse.
    Yelam part time part time temporary nu potu avaga life nasam pani regular posting podama yemathitu iruka indha atchiya sekarama veetuku anupanum

    ReplyDelete
    Replies
    1. Part teacher ku support a pesiydhuku thanks....

      Delete
  3. Tet.transfer.college.technicalposting.casepending.d.a.salaryproblem.incentiveproblem.Answerpannituschoolopenpannalam.

    ReplyDelete
  4. 10 மாதம் பொறுத்தது போல இன்னும் 3 மாதம் பொறுத்து கல்லூரி திறக்கலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி