ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோ ஆலோசனை! - kalviseithi

Jan 29, 2021

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோ ஆலோசனை!

 

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் நடக்கிறது.


தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்; அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களிடம், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல முறை மனு அளிக்கப்பட்டது.


இந்நிலையில், கோரிக்கைகள் குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து விவாதிக்க, ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் திருச்சியில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
  2. இந்த ஆட்சி அமைந்தால் பி.எட் படித்த குசநளாநசள -க்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். சீனியாரிட்டியில் வேலை கிடைக்கும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். ஆக மொத்தம் படித்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இவர்களது நியமனங்கள் அனைத்தும் 7000 8000 என்ற அவுட்சோர்சிங் முறையிலேயே நடைபெறுகிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து நியமிக்கும் வேலையை செய்து ஏழைகளின் அரசுப் பதவி கனவைத் தகர்த்துவிட்டது இந்த அரசு இந்த 10 வருடங்களில்…..

    ReplyDelete
  3. இந்த ஆட்சி அமைந்தால் பி.எட் படித்த FRESHERS -க்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். சீனியாரிட்டியில் வேலை கிடைக்கும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். ஆக மொத்தம் படித்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இவர்களது நியமனங்கள் அனைத்தும் 7000 8000 என்ற அவுட்சோர்சிங் முறையிலேயே நடைபெறுகிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து நியமிக்கும் வேலையை செய்து ஏழைகளின் அரசுப் பதவி கனவைத் தகர்த்துவிட்டது இந்த அரசு இந்த 10 வருடங்களில்…..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி