இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jan 26, 2021

இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


 கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். மேலும் பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


 இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இதன்படி பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் இருப்பினும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. 


அதே சமயம் கொரோனா காரணாமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காரணாமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து முதல்வரின் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியாகும் என்றார்.

25 comments:

 1. முதலில் நீங்கள் மாறுங்கள் ஐயா. சுயமாக முடிவு எடுங்கள். முதல்வர் எதற்கு.?

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள் முதல்வரின் அனுமதி பெற்று அறிவிக்கப்படும் என்றே கூறியுள்ளார்.

   Delete
 2. Replies
  1. 2013க்கு லிஸ்ட் விடணும்னு சொன்னால் 2017 2019 பாஸ் பண்ணவங்க நிலைமை

   Delete
  2. 2013 ku thana potruvom periya namama

   Delete
  3. 2013 kku mattum posting poda koodathu....Athu against rules

   Delete
 3. கொஞ்சம் பொறுங்கள்,தேர்தல் வரட்டும் எல்லாம் மாறட்டும்

  ReplyDelete
 4. என்ன மாற்றம் ? எல்லோரும் புத்தகத்தை பார்த்து பரிட்சை எழுதலாம், அதானே ?

  ReplyDelete
 5. 2013, 2017, 2019 tet candidate Ku job kodunga first

  ReplyDelete
 6. முதலில் உங்களைத்தான் மாற்றவேண்டும், இந்த கையாலாகாத அரசு. சாமானியனின் வழிகளை புரியாமல் இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று அறிக்கை மட்டுமே விடும் கல்வித்துறையை முதலில் மாற்ற வேண்டும். இதை செய்தால் அனைத்தும் சரியாகிவிடும்.

  ReplyDelete
 7. Part time teacher ku irrukira last chance udnay eludhuirungal porada veandiya nearam idhu elungal

  ReplyDelete
 8. நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இது தான் கல்வித்துறையின் முடிவு

  ReplyDelete
  Replies
  1. டும்.... டும்... டும்...

   Delete
 9. இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்- பாதிக்கபட்டோா்🎤.

  ReplyDelete
 10. இன்னும் சில மாதத்தில் நீயே மாற போற‌.

  ReplyDelete
 11. 2013 TET pass pannavangalukku dept la job venuma....
  contact.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி