'ஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல். - kalviseithi

Jan 21, 2021

'ஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.

 


பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 


எதிர்காலத் தலைவர்களை/தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 


இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களை அடுத்து சுகாதாரப் பணியாளர்களும், சட்ட வல்லுநர்களும் அதிகம் உழைக்கின்றனர். இதில் உழைப்பு என்பது பணியிடத்தில் மட்டுமின்றி அவர்களின் பணி சார்ந்த மற்ற வேலைகளும் அடங்கும்.


யு.சி.எல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் கிரீன் கூறுகையில், 'ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் அவர்களின் நல்வாழ்வு குறைந்துவிட்டது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களின் செல்வாக்கு குறைந்துவிட்டது. எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களின் பிரச்னைகளை களைய வேண்டியது நம் கடமையாகும். பிற தொழில்களோடு ஒப்பிடும்போது, ​​ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்வது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. 


கரோனாவுக்கு பிந்தைய சூழலில் ஆசிரியர்களின் பணி சவாலானதாகவே இருக்கும். அதேநேரத்தில் இந்த ஆய்வின் முடிவுகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், கற்பித்தல் தரத்தை அதிகம் நம்பியுள்ள மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்று தெரிவித்தார். 


நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்பது பொதுவாக பணி நேரமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் குறைவான நேரம் பணியில் இருந்தாலும் அதற்கு பின்னால் அவர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்று கூறுகிறது இந்த ஆய்வு. 


பள்ளி ஆசிரியர்கள் எம்மாதிரியான பணிகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள்? அவர்களின் திறன்கள், பணியில் திருப்தி, மாணவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 முதல் 60 வயது வரையிலான 857 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண் ஆசிரியர்கள். 


ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, மற்ற தொழில் செய்பவர்களைவிட ஆசிரியர்கள் இரு மடங்கு மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்கிறனர் என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி

- தினமணி 

17 comments:

 1. Especially difficult for private institutions. Less pay work more.

  ReplyDelete
 2. Uzhavan illai endral uyir vazha mudiyathu... I am also teacher. 5 classes ku 2 teachers irukura kevalamana seyal nadakurathu Inga than

  ReplyDelete
 3. Ofcourse the private teachers are treated as slaves

  ReplyDelete
 4. Govt teacher work pannalanaalum sambalam dhaan what about private teachers

  ReplyDelete
  Replies
  1. Govt. Teachers work pannavillainu neenga paathingala ?

   Delete
  2. Appadina neenga padichu govt . teacher aagunga

   Delete
  3. உன்னை பெற்றவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள். உன் புத்தி போலவே உன் எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.

   Delete
  4. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒற்றுமையாக இணைந்து தங்களுக்கு உரிய ஊதியம் வழங்காவிட்டால் பணிக்கு வரமாட்டோம் என்று ஒரு வாரம் இருந்து பாருங்கள்

   Delete
 5. ஆமாம் ஆமாம் 😄😄😄😄 சொல்லிக்கிட்டாங்க

  ReplyDelete
 6. நல்லா கதை சொல்றிங்க சார்..

  ReplyDelete
 7. Very low pay it is highly difficult to lead our life,especially during this period of pandemic

  ReplyDelete
 8. ஒருவர் செய்யும் தொழிலை பிற தொழிலுடன் ஒப்பிடுவதே தவறான புரிதல். நீங்கள் ஒப்பிடுவதால் இதை கூற வேண்டியுள்ளது.எனக்கு தெரிந்தவரை பிற தொலிழ்களை காட்டிலும் ஆசிரியர்களுக்கு அதிக நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், ஓய்வும் அதிகமாக கிடைக்கிறது. எப்போதும் எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் என்ற ஒற்றை வாக்கியத்தில் ஒழிந்து கொள்ள வேண்டாம். வெற்றியாளர்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் பொறுப்பேற்று பெருமை பேசுவது அழகல்ல. தோல்வி அடைந்தவற்களுக்கு ஏன் ஆசிரியர்கள் பொறுப்பேற்பதில்லை. (எ.கா) பேருந்து ஓட்டுனர் ஒரு தவறு செய்தால் அவர் வேலையை விட்டு நீக்கப்படுகிறார். காவலர் தவறு செய்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். இன்னும் பல உதாரணம் சொல்லலாம். ஆனால் ஆசிரியர்கள் ஒரு மாணவன் தோல்வி அடைவதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. மாறாக அவன் மீது உள்ள தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளவும் சிலர் முயற்சிக்கின்றனர். அதில் பாதிக்க பட்டவர்கள் பலர். 100%தேர்ச்சி கிடைக்காது என்பதற்காக பலரை பள்ளியை விட்டு அனுப்பியுள்ளனர். இது போன்று பல உதாரணங்களை கூற முடியும்...

  ReplyDelete
  Replies
  1. திரு.christo உங்களுக்கு குழந்தை இருந்தால் அந்த ஒரு குழந்தையை மட்டும் ஒரு நாட்டின் அதிபராக மாற்றிவிட்டு பேசுங்கள்... (ஒரு குழந்தையை மட்டும்தான்),ஏனென்றால் உங்களுக்குத்தான் அனைத்தும் தெரியுமே.. ஒரு குழந்தையை மட்டும்தான் வெற்றிப்பெறச் செய்யப்போகிறீர்கள்... கிட்டத்தட்ட உங்கள் கூடவேதான் அக்குழந்தை வளரும், உங்களால்தன் சிறப்பாக வளர்க்கப்படும்... எனவே, அக்குழந்தையை சிறப்புற வளர்த்து நிருபியுங்கள்... பின்பு, பிறரைக் கைக்காட்டலாம். இல்லையென்றால், தங்களால் ஒரே ஒரு குழந்தையையே கிட்டத்தட்ட 30 வருடம் உங்களிடம் முழுவதுமாக ஒப்படைத்தும், சிறப்பாக உருவாக்கமுடியவில்லையென்றால், ஒரு நாளைக்கு குறைந்தது 150 மாணவர்களை சந்தித்து அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை நோக்கி இக்கேள்வி கேட்பது நியாயமற்றுப்போகும்.... மனதில் கொள்க சார்... ஒரு மாணவனின் வெற்றி என்பது ஆசிரியர் சார்ந்தது மட்டுமல்ல அவனின் சூழல் மற்றும் மரபைச் சார்ந்தும் அமைகிறது நினைவில் கொள்க.... எப்பேர்ப்பட்ட சிறந்தவர்களின் புதல்வர்களில் கூட சிலர் வழிமாறிப்போவதுண்டு அப்படியிருக்க ... அனைவரையும் வெற்றிப்பெறச் செய்பவர்கள் மட்டுமே சிறந்த ஆசிரியர்கள் இல்லையென்றால் ஆசிரியர் இல்லை என்றெல்லாம் கூறுவது எவ்வகையில் நியாயம் சார்... சிந்தியுங்கள்... பள்ளியை விட்டு யார் அனுப்பினார்கள் ஏன் அனுப்பினார்கள் என அங்கேச்சென்று இங்கே பதிவிடுவதுப்போல் வினாவெழுப்புங்கள்... அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக பதிவிடாதீர்கள். நீங்கள் செய்யும் இச்செயல், எந்நேரமும் மாணவர் நலனில் பங்காற்றிக்கொண்டிருக்கும் பலருக்கும் வருத்தம் தரும்... உணர்க...

   Delete
 9. Teacher job is an unique. Government teachers private teachers both are working hardly but salary is differ. Yes a government teacher is getting four times better salary than a private teacher. Now private teachers are taking online class,while few government teachers are working in online class.both are same qualification.

  ReplyDelete
 10. https://tamilinforms.blogspot.com/?m=1

  Click this

  ReplyDelete
 11. Vaai kizhiya vimarsanam panrathu periyathu alla. Thonda kizhiya Kaththi unmayana aasiriyara irunthu Partha annaiiku orunal ungalukku theriyum vathiyar na yarunu kora mayiru solla vanthittinga.
  Intha alavukku vimarsanam pannum alavukku knowledge kotuthathu oru teacher. Marakkathangada loosu payalkala

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி