- ⭕ E Books ( all std )
- ⭕ LESSON PLAN
- ⭕ IMPORTANT FORMS
- ⭕ Guide (ALL STD)
- ⭕ PRIMARY STUDY MATERIALS (NEW)
- ⭕ UPPER PRIMARY ( 6 - 9)
- ⭕ 10 STUDY MATERIALS
- ⭕ 11 STUDY MATERIALS
- ⭕ 12 STUDY MATERIALS

Jan 5, 2021
Home
kalviseithi
தமிழர் திருவிழா தைப்பூசம் அன்று அரசு விடுமுறையாக அறிவிப்பு.
தமிழர் திருவிழா தைப்பூசம் அன்று அரசு விடுமுறையாக அறிவிப்பு.
செ.கு. எண் : 02 நாள் : 05.01.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 05.1.2021 தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா . இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி , கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . இலங்கை , சிங்கப்பூர் , மலேசியா , மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது . பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது , இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் . இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28 ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை , பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் , இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் . K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9
Related Post:
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியது
ReplyDelete💪💪💪
மிகச்சிறப்பு...
ReplyDeleteஅப்படின்னா இத்தனை வருஷமா தைப்பூசம்னா என்னன்னே தெரியாமதான் இருந்திங்களா...?
ReplyDelete'வேலை'க் கையில் எடுக்கிறது தானே இப்ப உங்க வேலையே...
ReplyDelete'நாம் தமிழர்' வரைவு அறிக்கையை நல்லாத்தான் காப்பி அடிக்கிறாரு முதல்வரு...!!!
ReplyDelete