Group 2 _ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2021

Group 2 _ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09 2019 அன்று தொகுதி 2 மற்றும் 22 ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது ) இரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும் , முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது . மிக முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன் , கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன அதனடிப்படையிலேயே , ஆழ்ந்து விவாதித்து மேற்படி தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது . மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள் , தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி , தற்கால அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர் . அவர்களது கோரிக்கையினப் பரிசீலித்த தேர்வாணையம் , தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது . முதனிலைத்தேர்வு ( Preliminary Examination ) முதனிலைத்தேர்வுக்கு ( Preliminary ) ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் , தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் -VIII , IX ( Units - VIII , IX ) க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் . தேர்வர்களின் தகவலுக்காகவும் , அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத்தேர்வுக்கான ( Prellminary Examination ) மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் . இத்தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் .

Click here to download pdf.

1 comment:

  1. தமிழக அரசுக்கு பணிவான வணக்கம்.

    முதன்மை எழுத்துத் தேர்வில், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலுக்கும் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் அவ்வினாக்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளீர்கள். நன்று நன்று.

    ஆனால் எனக்கோ தமிழ் மட்டும் தான் தெரியும்.

    தமிழில் கேட்கப்படும் கேள்விகள் எனக்கு புரிந்தாலும், எனக்கு ஆங்கில அறிவு இல்லாததால் நான் எவ்வாரு அவற்றை மொழி பெயர்ப்பேன்.

    சரி, இது ஒருபுறம் என்றால் ஆங்கிலம் தெரியாத என்கு, ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்வி என்ன என்று எப்படி தெரியும். அப்படியே படித்தாலும் கேள்விக்கான பொருள் தெரிந்தால்தானே அதனை தமிழில் மொழிபெயர்க்க முடியும்.

    ஆங்கிலம் தெரிந்தால்தான் தேர்வே எழுத முடியும்.

    இப்பொழுது எனக்கு என்ன வழி?

    தமிழக அரசே!!!!!

    தமிழும் படிக்க தெரியாமல் இருந்திருந்தால் நான் அரசு பணிக்கு படிக்காமலே இருந்திருப்பேன்...

    எடுக்கும் முடிவு ஒருபக்க சார்புடையதெனில், மருபக்கம் இருப்போர் என்செய்யவர்.


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி