பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings - kalviseithi

Jan 13, 2021

பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings

 

விழுப்பாம்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌ - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌.


2020 - 2021 நம்‌ கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்‌ நல / அரசு நிதியுதவி பெறும்‌ / மெட்ரிக்‌ / சுயநிதி உயர்‌ / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புகளுக்கு மட்டும்‌ 19.01.2021 அன்று பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது தொடர்பாக கீழ்காணும்‌ அறிவுரைகள்‌அனைத்து மாவட்டக்‌ கல்வி துலுவலர்கள்‌ மற்றும்‌ அனைத்து பள்ளி தலைமையாசிரியர்‌ / முதல்வர்களுக்கு வழங்கப்படுகிறது.


அனைத்து உயர்‌ , மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்கள்‌...


1. தலைமைஆசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ பள்ளிகளை திறப்பது தொடர்பான அனைத்து முன்னிலை ஏற்பாடுகள்‌ பேற்கொள்வதற்கு ஏதுவாக அலுவலக நேரத்தில்‌ பள்ளியில்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


2. அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்‌ நல / அரசு நிதியுதவி பெறும்‌ / மெட்ரிக்‌ / சுயநிதி உயர்‌ / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணாக்கர்களுக்கு 19.01.2021 அன்று பள்ளிகள்‌ திறக்க அனுமதிக்கப்பட்டடுள்ளது. எனவே பள்ளி வளாகங்கள்‌ / வகுப்பறைகள்‌ / கழிப்பறைகளை துய்மையாக வைத்திருக்கப்பட வேண்டும்‌.


3. பள்ளியில்‌ ஆசிரியர்கள்‌ / மாணாக்கர்கள்‌ உட்பட அனைவரும்‌ முககவசம்‌ அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்‌. உடல்‌ வெப்ப பரிசோதனை கருவி கொண்டு மாணாக்கர்களை பரிசோதித்து பள்ளிக்குள்‌ அனுமதிக்க வேண்டும்‌.


காய்ச்சல்‌ இருமல்‌ இருக்கின்ற மாணாக்கர்கள்‌ எவரேனும்‌ பள்ளிக்கு வருகைபுரிந்திருந்தால்‌ உடனடியாக பெற்றோருக்கும்‌ துருகில்‌ உள்ள சுகாதார மையத்திற்கும்‌ தகவல்‌ தெரிவிக்க வேண்டும்‌.


4. ஒவ்வொறு நாளும்‌ காலை / மாலை, பள்ளி துவங்குவதற்கு முன்பும்‌, பள்ளி முடிவடைந்த பின்பும்‌ பள்ளி வளாகங்கள்‌ வகுப்பறைகள்‌ துறைகளில்‌ உள்ள மேசை, நாற்காலி, சுதவு, ஜன்னல்‌ ஆகியவற்றில்‌, நகராட்சி! பேரூராட்சி பணியாளர்களைக்‌ கொண்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம்‌ செய்திட சார்ந்த பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌ / முதல்வர்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்‌.


5. பள்ளியில்‌ வகுப்பறைகள்‌ நூலகங்கள்‌ மாணாக்கர்‌ தங்கும்‌ விடுதி, கழிவறைகள்‌ கை கழுவும்‌ இடங்களை தினமும்‌ கிருமி நாசனி தெளித்து, தூய்மை படுத்திட வேண்டும்‌ .


6. அனைத்து வகை உயர்‌ / மேல்நிலைப்பள்ளிகளில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடஷக்கையாக பாதுகாப்பு வசதிகள்‌, கிரிமிநாசினி தெளித்தல்‌,  போன்ற அத்தியாவசிய வசதிகளை மாணாக்கர்களுக்கு தலைமையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ ஏற்படுத்தி தரவேண்டும்‌. மேலும்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி திட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலிருந்தும்‌ மேற்காணும்‌ இனங்களுக்கு செலவு மேற்கொள்ளலாம்‌.


7. ஒவ்வொரு வகுப்பறையிலும்‌ 25 மாணாக்கர்களுக்கு மிகாமல்‌ அமரும்‌ வகையில்‌ வகுப்பறை வசதிகளை ஒவ்வொரு பள்ளியில்‌ தலைனையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ ஏற்படுத்திட வேண்டும்‌.


8. மாணாக்கர்களின்‌ நோய்‌எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்‌ வகையில்‌ சுகாதார துறையினால்‌ வைட்டமின்‌ மாத்திரைகள்‌ மற்றும்‌ துத்தநாக மாத்திரைகள்‌ வழங்கப்படவுள்ளதால்‌ மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையின்‌ விவரத்தினை சார்ந்த சுகாதார அலுவலகத்திற்கு வழங்கிடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


9, பள்ளியில்‌ மாணாக்கர்கள்‌ வரும்போது குறித்த சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதையும்‌ மாணாக்கர்கள்‌ முககுவசம்‌ ஆணிந்துள்ளார்களா? என்பதையும்‌ சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்‌ / ஆசிரியர்கள்‌ குழுவினரால்‌ கண்காணித்திட வேண்டும்‌. கல்வி அலுவலர்கள்‌ ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.


10. ‌ நிலையான வழிகாட்டு, நடைழறைகளை அனைத்து வகை உயர்‌ / மேல்நிலைப்‌ பள்ளி தலைமைஜசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ பின்பற்றி செயல்படுகிறார்களா என்பதை சார்ந்த, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.


11. விடுதியில்‌ தங்கும்‌ மாணாக்கர்‌ தவிர்த்து பிற மாணாக்கர்கள்‌ தனித்தனியாக  வீட்டிலிருந்து, கொண்டு வரவேண்டும்‌. மேலும்‌, மதிய உணவு உண்ணும்‌ போது கூட்டமாக ஆமர்ந்து உண்ணக்கூடாது எனவும்‌, ஒருவருக்கொருவர்‌ உணவு பரிமாரிக்‌ கொள்ளகூடாது எனவும்‌ திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

12. பள்ளிமில்‌ காலை மற்றும்‌ மதிய இடைவேளையிலும்‌ நேரத்தில்‌ மாணாக்கர்கள்‌ கழிப்பறை பயன்பாட்டிற்கு பிறகு கட்டாயம்‌ கிருமிநாசினி தெளித்து கழிப்பறைகள்‌ சு்தப்படுத்திட வேண்டும்‌.


13. உணவு இடைவேளைக்கு பிறகு கைகழுவும்‌ இடங்களில்‌ போதிய இடைவெளியை மாணாக்கர்‌ மின்பற்றுகிறார்களா என ஆசிரியர்கள்‌ கண்காணித்திட வேண்டும்‌. மேலும்‌, உணவு, இடைவேளைக்கு முன்னும்‌ பின்னும்‌ கிருமி நாசினி கொண்டு கைகழுவும்‌ இடங்களை தூய்மைப்படுத்திட வேண்டும்‌.

9 comments:

 1. NCTE already told TET certificate validity for lifetime. TET passed candidates don't worry about it.

  ReplyDelete
  Replies
  1. When posting Mr, Minister Always waiting.

   Delete
  2. அட்மிஷன் வேணும் நண்பர்களே... வெறும் பள்ளிக்கூடத்துல வாத்தியார் மட்டும் ஊக்காந்து என்ன பண்ண.. எல்லாமே தனியார் பள்ளியில் பசங்கள சேத்துட்டு அரசாங்கத்தில் வேலை மட்டும் எப்படி கேப்பிங்க...

   Delete
 2. மாணாக்கர்களின்‌ நோய்‌எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்‌ வகையில்‌ சுகாதார துறையினால்‌ வைட்டமின்‌ மாத்திரைகள்‌ மற்றும்‌ துத்தநாக மாத்திரைகள்‌ வழங்கப்படவுள்ளதால்‌...,... இத்தனை மாதங்களும் எங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்து நல்ல சத்தான எதிர்ப்பு சக்தி உணவுகளை கொடுத்துள்ளோம். அதனால் நீங்கள் ஒன்றும் என் பிள்ளைக்கு மாத்திரைகள் கொடுக்க வேண்டாம். என் பிள்ளைக்கு தேவையான உணவு வகைகள் மாத்திரைகள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. no one is compelling you to have govt tablets, dont complain about the quality if u can afford high class medicine. poor people are there. they will be benefitted, you pls shut your beautiful mouth.

   Delete
 3. Replies
  1. எழுத்து பிழை உள்ளது

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி