TNPSC - உரிமையியல் நீதிபதி பதவி: முதன்மைத் தேர்வு முடிவுகள், நேர்காணல் தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2021

TNPSC - உரிமையியல் நீதிபதி பதவி: முதன்மைத் தேர்வு முடிவுகள், நேர்காணல் தேதி அறிவிப்பு.

 


உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. அதேபோல அப்பதவிக்கான நேர்காணல் தேர்வுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதிக்கான 171 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/ 2019 வெளியிடப்பட்டு முதல்நிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் 7,942 பேர் கலந்துகொண்டனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வு, 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 239 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து தற்போது நேர்காணல் தேர்வுக்குத் தற்காலிகமாக 58 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கு பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது.

5 comments:

  1. All exams results released but whynot come the BEO result? Eppa varum BEO result?

    ReplyDelete
  2. Beo result எப்போது வரும் யாருக்காவது தெரியுமா சொல்லுங்க

    ReplyDelete
  3. Don't buy qestion bank in srimaan coaching centre trichy
    They are cheating and fraud person
    Sakthi book xerox potu kudukiran
    Amount 2700 vanguranga
    Very worst

    Dont buy any thing in srimman trichy

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி