தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2021

தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆலோசனை!

 

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு சுகாதாரத்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.


பள்ளிகள் திறப்பு ஆலோசனை:


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 9, 11ம் வகுப்புகளுக்கு கடந்த பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மீதமுள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.


புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் போதிலும், கொரோனா பரவல் இல்லை என்பது பரிசோதனை மற்றும் ஆய்வுகளின் மூலம் தெளிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கான வரையறை திட்டம் தற்போது தயார் செய்யப்பட்டு சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் தான் இது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி