10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2021

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.


10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ  அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழக முதல்வர் ஜனவரி 2019 ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 5,068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை ரத்து செய்ததை வரவேற்கிறோம். தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியினைத் தெரிவிக்கிறோம்.

எனினும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, பறிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி- சரண் விடுப்பினை உடனடியாக முன் தேதியிட்டு வழங்குதல், 21 மாத ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை வழங்குதல், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்குதல், ஊதிய முரண்பாட்டினைக் களைதல், ஆசிரியர், அரசு ஊழியர்- பணியாளர் பகுப்பாய்வுக் குழுவின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

ஜனவரி 2019 ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடத்தில் பணியமர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இது தொடர்பாக சென்னையில் பிப்ரவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் 72 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

அதே நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்- உயர்மட்டக் குழுத் தலைவர்கள் தலைமையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  2. Soon recruit new pg asst teachers through pg trb 2021 conduct exam for pg trb tet is the correct way to recruit capable young and energetic teachers.

    ReplyDelete
  3. நீ வேலை கிடைத்ததும் உன் பிள்ளையை தனியார் பள்ளியில் படிக்க வெப்ப. உனக்கு இங்க வேலை வேணும். வேலை மட்டும் அரசாங்க வேலை . ஆனா நீங்க உங்கள் நம்பாம உங்க பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பீங்க. உங்க பிள்ளைகளை கொரோனா சமயத்தில் பள்ளிக்கூடம் அனுப்புவீங்க. ஆனா நீங்க வந்தா கொரோனா வந்துடும்னு சொல்லி அரசாங்க பள்ளிகூட குழந்தைகள வரச் சொல்ல மாட்டீங்க. ஏனா நீங்க வேலைக்கு வரணும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி