கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2021

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!

 

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய மசோதா தமிழச சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை  பாமகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றப்பின் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பிடித்தது. ஆனால், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு  தொடர்பாக அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், அதிருப்தியில் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு செய்தததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதனை வெளிப்படும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரும் சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். ஆனால்  போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினரை, போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், சாலை மறியல் செய்ததோடு ரயில்களை வழி மறித்து அதன் மீது கற்களை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு  நிலவியது.தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் பழனிசாமியை சந்தித்து வன்னியர்களுக்கு 20% இட இதுக்கீடு வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். 


இருப்பினும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அதிருப்தியில் இருந்த ராமதாஸை சமரசம் செய்ய இரு அமைச்சர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து பேசினர். இதற்கிடையே, இன்று மாலை சட்டமன்ற தேர்தல்  தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. எனவே, தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்டது. 


உள் ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவையில் தாக்கல் செய்தார். மசோதா குறித்து முதல்வர் அளித்த விளக்கத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கவும்,  சீரதரபினருக்கு 7% தனி இடஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு  தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எம்பிசியில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. 7% உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.

8 comments:

  1. Matra jathi Ottu thevi illaiya ayya

    ReplyDelete
    Replies
    1. Ungalluku vendum entral poradavendiyathuthane

      Delete
    2. Ungalluku vendum entral poradavendiyathuthane

      Delete
  2. அமுதசுரபி பயிற்சி மையம்
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    PG TRB தமிழ் & கல்வியியல்
    Best coaching centre in Dharmapuri
    சாதனை :
    கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
    வகுப்பு நடைபெறும் இடம் :
    RK Complex
    Near 4 Road,Dharmapuri.

    கிருஷ்ணகிரி
    Near Govt. Arts. College for men,kuppam Road.
    Chennai bye pass
    Contact : 9344035171
    (குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)

    ReplyDelete
  3. எல்லாம் தேர்த‌ல் ஸ்ட‌ண்ட்...ஆனால் அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே போராடி பெற்ற‌ ஊக்க‌ ஊதிய‌ம் உள்ளிட்ட‌ உரிமைக‌ள் ப‌றிப்பு...என்ன‌ கொடுமை இது...

    ReplyDelete
  4. சமூக அநீதி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. தமிழக முதல்வர் தொடர்ந்து தவறுகள் செய்கிறார். சம்பாதித்து வைத்த நல்ல பெயரை எல்லாம் மூன்றே நாட்களில் கெடுத்துக் கொண்டார்.

    ReplyDelete
  5. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி