ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி - kalviseithi

Feb 16, 2021

ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி

 ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர்வதற்குத் தகுதியான பள்ளி மாணவர்கள், பிப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


''சென்னை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 26 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில் சேர விரும்பும் எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி மாணவர்கள், அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் காப்பாளரிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பூர்த்தி செய்து, பள்ளி மாணவர்கள்  விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வரிடமும் சான்றொப்பம் பெற வேண்டும்.

மேலும், உரிய ஆவணங்களுடன் பள்ளி மாணவர்கள் பிப்.18-ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் பிப்.19-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, 044- 2522 5657 என்ற எண்ணை அணுகலாம்''.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி