தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2021

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.!

 


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம்  விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின்  ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டது. 


இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. நடத்தை விதிமுறைகள் வழக்கம் போல பெயரளவில் மட்டுமா அல்லது வழக்கத்திற்கு மாறாக உண்மையாலுமேவா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி