ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2021

ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு


 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும்.


தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.


இதையடுத்து, 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. அதனால், புதிய கல்வி ஆண்டில், சில மாதங்களாவது பள்ளிகளை திறந்து பாடம் நடத்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு வரும், 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட ஆலோசனையில், பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவானது. மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

6 comments:

  1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா இழவு வீடா இருந்தாக் கூட விளம்பரஞ்செய்து பணஞ்சம்பாரிக்கும் ஈனப்பிறவியாடா நீ...

      Delete
    2. Tamilnadu la PGTRB Maths class na Athu Target Madurai mattum thaan. Avangale entha vilambaramum seivathu illa. But nee....

      Delete
    3. பத்தி எரியற வீட்ல புடுங்குன கதையா இவன் எந்த நியூஸ் போட்டாலும் அட்வர்டைஸ்மென்ட் தூக்கிக்கிட்டுவர்றான்

      ஏண்டா இப்படி மன உளைச்சலை உண்டாக்குரிங்க

      Delete
  2. Ayya please all pass this year without exam

    ReplyDelete
  3. Because 11th is harder than 12th but we clear it easily.if we study from starting we easily clear this also but due to corono ii become sooooo hard please all pass board exam without test put same for the 12th which we got in 11th. Please think aboit it

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி