தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2021

தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி – ஆதிதிராவிடர் மாணவிகளை அதிக  எண்ணிக்கையில்  பள்ளியில் சேர்த்து  தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும்  தலைமையாசிரியர்களுக்கு  ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட  வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 9 முதல் 10 ஆம் வகுப்பு முடிய தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமை ஆசியர்களுக்கு பார்வை 2 ல் காணும் அரசு கடிதத்தின்படி இரண்டு பிரிவிலும் வெகுமதி தொகை அளிக்கப்பட்டு வருகிறது . பார்வை 3 - ல் காணும் ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகளின்படி இத்திட்டத்தினை 2020-2021 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தும் பொருட்டு தற்போது புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியாக வெகுமதி தொகை பெற தகுதியுள்ள தலைமை ஆசிரியர்களின் சார்ந்த விவரங்களை Excell Format- ல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கல்வி மாவட்டம் வாரியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக ' இ ' பிரிவு மின்னஞ்சல் esec.tndse @ gmail.com மூலம் அனுப்பி விட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை 19.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Incentive to Hm - Dir Proceedings - Download here...


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி