முதுநிலை ஆசிரியர் பணி எப்போது கிடைக்கும்? - kalviseithi

Feb 19, 2021

முதுநிலை ஆசிரியர் பணி எப்போது கிடைக்கும்?

 


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கான அமைப்பு சார்பில், நிர்வாகி வன்னிமுத்து தலைமையில், சென்னையில் உண்ணாவிரத போராட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன், போராட்டத்தை துவக்கி வைத்தார்.


அவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக இருந்த, 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, 2019 செப்டம்பரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, 2017- - 18 மற்றும் 2018- - 19ம் ஆண்டு காலியிடங்களுக்கு மட்டும், பணி நியமனம் வழங்கப்பட்டது. 2019- - 20ம் ஆண்டுக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை.


இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளி கல்வி செயலர், இயக்குனர் உள்ளிட்டோரிடம், பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக, 2,098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு முன், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப் பட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

13 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 2. நீங்கள் PGTRB தேர்வு எழுத இருப்பவரா? அகாடெமி செல்ல இயலாமல் தவிப்பவரா? இனி கவலை வேண்டாம். PGTRB English தேர்விற்கான ஆன்லைன் தேர்வுகளை நடத்த இருக்கிறது இதன் முதல் முயற்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை(21-01-21) PGTRB ஆங்கில பிரிவுக்கான முதல் ஆன்லைன் தேர்வு முற்றிலும் இலவசமாக நடத்தபட இருக்கிறது. (அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் தேர்வுகள் மிக குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) (மற்ற பாடங்களுக்கு அடுத்தடுத்த வாரங்களில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்) இந்த வார இலவச தேர்வில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி உங்கள் பெயரை உடனே இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
  https://tamilmadal.com/registration-for-pgtrb-mock-test
  இந்த வார தேர்விற்கான பகுதி
  PGTRB ENGLISH UNIT-1

  ReplyDelete
 3. பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் நண்பர்கள் பணி வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 4. Apexcareacademy,Rasipuram

  Centre for Physics

  Online class and test

  Admission going on

  www.apexcareacademy.com

  8807432425

  ReplyDelete
 5. Ivanguluku Vera valaiya illaya
  Next exam Ku padikavandithuthana

  ReplyDelete
  Replies
  1. Sir first nenga unga velaiya parunga inga ungla yarum karuthu kekala

   Delete
  2. Neenga indha time eludhathane poringa ipovum 1:2 dhan. Ungalukum indha nilamai vara en vazhthukal. Appo puriyum yaruku velai illainu. Naanga indha time eludhuna kooda kandipa select aiduvom.

   Delete
 6. Sir vungalaimari migavum hard work seithu pass one mark posting miss panunavungal sir nainigalum ethipontru oru nilai vanthal avarkal castam therium dont disgrate pls

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி