அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2021

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அரசு பள்ளிகளில் தொடக்க நிலை முதல் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் உடற்கல்வி மானியம் ( “ Sports and Physical Education ” ) வழங்கப்படுகிறது. 


 மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு பொருள்களின் பெயர் பட்டியல் மற்றும் வழிகாட்டுநெறிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 


விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விளையாட்டு மற்றும் உடற்கல்வி உட்கூறின் மூலம் அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு கீழ்க்காணுமாறு நிதி வழங்கப்படுகின்றது.


* தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ .5,000 

* நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ .10,000 

* உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ .25,000 


பள்ளிகள் ( 1 முதல் 5 வகுப்பு வரை , 6 முதல் 8 வகுப்பு வரை , 9 முதல் 12 வகுப்பு வரை ) கொள்முதல் செய்ய வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய MoE ( Ministry of Education ) Guideline அனுப்பப்படுகிறது.


SPD Guidelines - Download here....



1 comment:

  1. Special teacher P.E.T 1;2 certificate verification candidate Ku second list Vara chance irrukka pls yaaravadhu sollunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி