வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறும் - CEO Proceedings. - kalviseithi

Mar 31, 2021

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறும் - CEO Proceedings.

 


நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி வகுப்பானது ( 2nd Repeat Training Class ) , வருகின்ற 03.04.2021 ( சனிக் கிழமை ) அன்று காலை 9.30 மணிக்கு , அந்தந்த சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பயிற்சி மையங்களில் ( அதாவது கடந்த 26.03.2021 அன்று நடைபெற்ற அதே பயிற்சி மையத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பிற்காக தனியாக தகவல் ஆணை அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 03.04.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி ( 2nd Repeat Training Cass ) வகுப்பிற்கு வாக்குச்சாவடி அலுவலர்களை , மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி , அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள ( instructed to ensure that there are no absentees on 03.04.2021 ) அறிவுறுத்துமாறு சம்மந்தப்பட்ட அலுவலக தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 


மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள்மீது , தேர்தல் நடத்தை விதிகளின்படி , உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி