ஏப்.10 முதல் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு : கால அட்டவணை வெளியீடு - kalviseithi

Mar 20, 2021

ஏப்.10 முதல் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு : கால அட்டவணை வெளியீடு

 தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு இத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித் துறை அண்மையில் அறிவித்திருந்தது.


இந்நிலையில், தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. தட்டச்சு ஜுனியர் கிரேடு தேர்வுகள் 5 பேட்ச்களாகவும், சீனியர் கிரேடு தேர்வுகள் 4 பேட்ச்களாகவும் நடைபெறுகின்றன.


ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் மாதம் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in/site) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பத் தேர்வுகள் தேர்வு வாரியத்தின் தலைவரும், மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான கே.விவேகானந்தன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி