அரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய தமிழக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார் - kalviseithi

Mar 4, 2021

அரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய தமிழக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்


 பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் அமைப்புகள் கடைசிக்கட்டமாக நடத்திய போராட்டத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாற்றி விட்டனர் என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, புதிய பென்ஷன் திட்டத்தை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தியது. மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் கோரிக்கை வைத்தனர். 2011 சட்டமன்ற தேர்தலின்போது பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்திலும், 110வது விதியில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும், அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடைசி கட்ட போராட்டமாக பிப். 2 முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம், சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினர். ஆனால், போராட்டத்தை அரசு  கண்டுகொள்ளவில்லை. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் கோரி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தை நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்களும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அனைத்து போராட்டத்தையும் அதிமுக அரசு ஏன் என்று கூட கேட்கவில்லை. இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் நல்ல அறிவிப்பு வரும் என பல்வேறு துறையின் அரசு ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது குறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவதாக நம்ப வைத்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு எமாற்றிவிட்டது’’ என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

8 comments:

 1. அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ப் பெரும‌க்க‌ள் ஒண்றிணைந்து தேர்த‌ல் க‌ளப்ப‌ணியாற்றி ஆளும் அ.தி.மு.க‌ கூட்ட‌ணியைப் ப‌ழி தீர்ப்போம்...
  ஏப்ர‌ல் 6 நாம் திருப்பி அடிக்கும் நாள் ம‌ற‌ந்து விடாதீர்!...

  ReplyDelete
 2. Sathiyamaga nan thirippi adippan

  ReplyDelete
 3. Even for 2013 TET weightage affected candidates also not considering, no teachers posting last 7 years

  ReplyDelete
 4. 20 வருடம் அல்லது 30 வருடம் அரசு பணி மற்ற எங்கும் காட்டிலும் அதிக சம்பளம், இவை போதாதென்று ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் எதற்கு , அனைவருக்குமான ஓய்வுதியத்தையும் நிறுத்தி cps குள் கொண்டுவர வேண்டும் ,ஓய்வு பெறும் போது இழுத்தடிப்பு செய்யாமல் cps பணத்தை கொடுத்தால் போதுமானது அதைவிடுத்து சாகும் வரை ஓய்வூதியம் எல்லாம் வீண் செல்வு... அரசியல்வாதிகளுக்கும் ஓய்வு ஊதியத்தை நிறுத்த வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி