கணினி ஆசிரியர்கள் பிரச்னை தீர்க்க குழு, 3 ஆண்டுக்கு பின் பதில் அளித்த ‘மத்திய அரசு’ - kalviseithi

Mar 12, 2021

கணினி ஆசிரியர்கள் பிரச்னை தீர்க்க குழு, 3 ஆண்டுக்கு பின் பதில் அளித்த ‘மத்திய அரசு’

 


6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயம் அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும், அரசு பள்ளியில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு கணினி ஆசிரியராவது நியமிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு ஆணையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.


அதில், மத்திய அரசு, தமிழக அரசு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்று வேண்டுகோளாகத்தான் வைத்துள்ளதே தவிர ஒரு உத்தரவாக பிறப்பிக்கவில்லை. பெயரளவில் எங்களை சமாளிக்கும் நோக்கில், தேர்தல் மனதில் வைத்து, இந்த பதில் மனு தயார் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இதனால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பற்ற 60000கணினி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எதிர்வரும் தமிழக அரசிடம் எங்கள் கோரிக்கை வலுவாக வைக்க திட்டமிட்டுள்ளோம்.


இந்த நிலையில், கிட்டதட்ட மூன்றாண்டு விழிப்புக்கு பின், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, மத்திய அரசு, சங்க செயலாளருக்கு ஒரு பதில் மனு அனுப்பியது, அதில், கணினி ஆசிரியர்கள் பிரச்னைகளை ஆராயவும், அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஒரு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழக அரசு இடைக்கால பட்ஜெட் தொடரில் கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது ஆனால் அதற்கு ஆசிரியர்கள் நியமனம் இன்றி அரசு பள்ளியில் பணிபுரியும் வேறுபாட ஆசிரியர் கொண்டே கற்பிக்க நினைக்கிறது.அதற்கு பயிற்சி கொடுப்பதாக செய்திகள் வெளிவருகின்றன . 


"இதற்கெல்லாம் முன்னோடியாக சமச்சீர் கல்வியில் 2011ஆம் ஆண்டு  கலைஞர் ஆட்சிக்காலத்தில் கணினி அறிவியல்  தனிப்பாட புத்தகங்களாக அச்சிட்டு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்காக வைத்திருந்தது. அந்த பாடமும் பாட புத்தகமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இன்று வரை கிராமப்புற மாணவர்களுக்கு சென்றடையவில்லை கடந்த பத்தாண்டுகளாக.


மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்திற்காக  கொடுக்கப்படும் நீதியை வீணாகாமல் தமிழக மாணவர்களுக்கு முறையாக சென்றடையும் விதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் இதற்கு தகுந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதே இன்றைய வரை எங்களது கோரிக்கை.


வெ.குமரேசன்,மாநிலப் பொதுச் செயலாளர் ,9626545446 ,தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

5 comments:

 1. PG TRB 2021*
  Computer Instructor Coaching Classes

  Live recorded model classes link: press the link please sir/ madam

  https://drive.google.com/file/d/1zfV0--0HyXY-hSLCXkKrtKwVjYncaPt-/view?usp=drivesdk

  Fresh Batches:
  1. Evening Classes
  Live On line Classes*
  *Monday to Friday*

  2. Weekend Batches:
  Saturday and Sunday Full Day

  Classes +Materials +Tests +Discussion + Education + GK

  இந்த பயிற்சியின் மூலம், நீங்கள் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  *Magic Plus Coaching centre, Erode -1.*

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 2. Where is
  "Diploma" Group...........?
  "PGDCA " Group .......... ?

  Nobody is here(Tamil Nadu)

  ReplyDelete
 3. கணினி அறிவியல் பாடத்தை கணினி அறிவியல் பயின்ற ஆசிரியர் தான் நடத்த ேண்டும் என்கிறீர்கள். 6-8 லிருந்து இயற்பியல் பாடத்தை இயற்பியலில் பட்டம் பெற்ற ஆசிரியர் தான் நடத்துகிறாரா ?

  இந்தக் கேள்வியை அந்த வல்லுநர் குழு எழுப்புமா ? அல்லது வழக்கம் போல டீ வடை சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 4. அந்தந்த பாடத்தில் பட்டம் பெற்றவர் பாடம் நடத்தினால் தான் மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக நடத்த முடியும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி