தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவு. - kalviseithi

Mar 31, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவு.

 


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

 1. Krishna PGTRB English

  https://t.me/K72Tr/7
  Or @K72Tr or
  Search Krishna PGTRB English in Telegram and join

  JOIN THE TELEGRAM
  EXCLUSIVELY FOR ENGLISH STUDENTS

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி