அரசு உதவிபெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - மேலும் அதிகரிக்க வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2021

அரசு உதவிபெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

 


தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் மேலும் 36 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை மேல்நிலைய பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 56 ஆக  உயர்ந்துள்ளது. நேற்று 20 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 36 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை மேற்கொண்ட 200 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் சோவிந்த ராவ் அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 


அவரை அடுத்து அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆய்வாளர்கள், அம்மாப்பேட்டை ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 20 பேரில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 16 பேர் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 comments:

  1. Appdiya innum konjam konjama sethurivanga athusari yarusetha enna ivangalukku therthal than mukkiyam ithala pava patta jenmanga students than nalla irunga

    ReplyDelete
  2. அது எப்படி கொரோனா அரசுப் பள்ளி மாணவர்களை மட்டுமே தாக்குகிறது ? இந்த மாணவர் அரசு பள்ளி மாணவர் இந்த மாணவர் தனியார் பள்ளி மாணவர் என்று பிரித்து இனம் கண்டு அரசுப் பள்ளி மாணவர்களை மட்டுமே தாக்கும் அளவுக்கு கொரோனாவுக்கு புதிய வீரியம் வந்து விட்டதா என்ன ? இருந்தாலும் இருக்கும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி, கூடவே பள்ளி செல்லும் பணியும் இருக்கிறது, கூடவே தேர்வு வைத்தால் அந்த பணியும் இருக்கிறது, இதையெல்லாம் மனதில் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அவர்களின் பணிச்சுமையை குறைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். கடவுளும் அவர்களின் பிரார்த்தனைக்கு செவிமடுத்து அரசுப் பள்ளி மாணவர்களாக பார்த்து கொரோனாவை பரப்புகிறார். தேர்வு நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் மட்டும். இது எது வரை தொடரும் என்றால் தேர்வு ரத்து இந்த அறிவிப்பு வெளிவரும் வரை. எதையுமே தட்டையாக யோசிக்கும் நமது கல்வியாளர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், கண்ணை மூடிக்கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல, தேர்வு ரத்து என்ற செய்தியை வெளியிடுவார்கள். பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்கள் கிட்டத்தட்ட 40 50 வயதுகளில் இருப்பார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்கின்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் கொரோனா தொற்று என்பது பெற்றோர்களின் மூலமாகக்கூட மாணவர்களுக்கு பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. காரணம் அவர்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள், கடை தெருவில் அலைகிறார்கள், வெயிலில் வாடி வதங்குகிறார்கள்,தொழிற்சாலைகளில் வெந்து சாகிறார்கள், ஆபீஸில் மேலதிகாரி தரும் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்,அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, அவர்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே மாணவர்களையும் பெற்றோர்களையும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தல் செய்து செய்து நாட்டில் தொற்று எப்போது குறைகிறதோ அப்போது அவர்கள் பணிக்குச் செல்லட்டும். ஏனெனில் இது மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. Yenda paithiyam news paruda second wave spread speedly loosu pola comments podadha nee setha onnu illa students Chinna pullaiga setha yevlo kastam

      Delete
    2. Padipa vachi nakka valikkava pora

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி