6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்; உரிய ஆசிரியர்கள் இன்றி சாத்தியம் ஆகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2021

6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்; உரிய ஆசிரியர்கள் இன்றி சாத்தியம் ஆகுமா?

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்ற ஒற்றை வாக்கியம் இடம் பெற்றது.பெரும்பாலான தனியார் பள்ளிகள் தொடக்க வகுப்பிலேயே அவர்களுக்கு கணினி பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் ஒரு மாணவன் பிளஸ் 1 வகுப்பில்தான் கணினி அறிவியல் படிக்க முடிக்கிறது.இதனால் அவர்கள் உயர்கல்வியில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 'ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்பிரிவை அரசு பள்ளிகளில், ஆறாவது பாடமாக தொடங்க வேண்டும், கட்டாயப் பாடமாக கணினி பாடத்தை பயிற்று வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்தனர்.இதன் விளைவுதான், தமிழக அரசின் ஒற்றை வாக்கிய அறிவிப்பாக மலர்ந்தது.தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது:கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்தது.  அதிமுக அரசு அதனை  மாணவர்களுக்கு வழங்காமல் குப்பையில் போட்டது.


கணினி ஆசிரியர்களுக்கு 'டெட்', 'ஏ.இ.இ.ஓ.,', 'டி.இ.ஓ.,' போன்ற தேர்வுகள் கிடையாது. கடந்த, 2011ல் அ.தி.மு.க., அரசு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தியது. கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.கடந்த, 10 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் கூட வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, 814 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில், திடீரென வந்த அரசாணையால், 60 ஆயிரம் பேரில் 25 ஆயிரம் பேர் மட்டும் தேர்வு எழுத முடிந்தது. மீதமுள்ள 35 ஆயிரம் பேர் தேர்வை கூட சந்திக்க முடியவில்லை.ஆசிரியரின்றி கணினிக்கல்வி சாத்தியமா?தற்போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பிற்கு, 'டேப்' மட்டும் வழங்கிவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்தே அவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்கான பயிற்சி துவங்கிவிட்டது. கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க அதற்கு உரிய துறையில் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

9 comments:

  1. எந்த பகுதிநேர ஆசிரியர்கள் கணினியில் B.Ed முடிக்கவில்லை mr.குமரேசன் அனைத்து தகுதியோடுதான் உள்ளோம்

    ReplyDelete
  2. சாத்தியமாகும்

    ReplyDelete
  3. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  4. What about polytechnic students..
    qualification: Diploma in computer Technology/Engineering.
    NEXT..
    qualification: PGDCA (Post graduate diploma in computer application.

    ReplyDelete
  5. What about polytechnic students..
    qualification: Diploma in computer Technology/Engineering.
    NEXT..
    qualification: PGDCA (Post graduate diploma in computer application.

    ReplyDelete
  6. ஏற்கனேவே 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் உரிய ஆசிரியர்களைக் கொண்டுதான் பாடம் நடத்தப்படுகிறதா ? இயற்பியல் பாடத்தை இளங்கலை இயற்பியல் படித்த ஆசிரியர் தான் நடத்துகிறாரா? அல்லது ஆங்கிலத்தை BA ஆங்கிலம் படித்தவர்தான் போதிக்கிறாரா ?
    ஆனால் தனியார்ப் பள்ளிகளில் அப்படி இல்லை. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் தான் நடத்துகிறார். எதையுமே தட்டையாகேவே சிந்திக்கும் கல்வி மாமேதைகளே முதலில் அரசுப்பள்ளிகளில் இதை சரிசெய்யுங்கள்

    ReplyDelete
  7. இது சிறப்பாசிரியர் பணியிடம்
    தையல் ஓவியம் பணியிடத்தில் வேலை பார்ப்பவர்கள் எந்த தகுதி அடிப்படையில் வந்தார்கள் டிப்ளமோ தகுதி தான்
    தையல் ஓவியம் பாட்டு விளையாட்டு போன்ற பாடங்களுக்கு எப்படி தேர்வு கிடையாதோ அதே போல் தான் கணினி பாடமும் 6லிருந்து பத்து வரை
    பி.எட் கல்வி தேவை எனில் அதற்கு டெட் தேர்வு அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி