கோவிஷீல்டு டோஸ் இடைவெளி 8 வாரங்களாக உயர்த்தி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2021

கோவிஷீல்டு டோஸ் இடைவெளி 8 வாரங்களாக உயர்த்தி உத்தரவு

 

கொரோனாவுக்கான, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் இரண்டு, 'டோஸ்' களுக்கும் இடையிலான கால இடைவெளி, எட்டு வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 'சீரம்' நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும்; 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டத்தில், டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், உடல் நலக் கோளாறுடன் உள்ள, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.இந்த தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. முதல் டோஸ் செலுத்தப்பட்டு, 28 நாட்களுக்குப் பின், இரண்டாம் டோஸ் செலுத்தப்படுகிறது. 


இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு நேற்று அனுப்பி வைத்தது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:விஞ்ஞான ஆதாரங்களை கருத்தில் கொண்டு, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி, 28 நாட்களில் இருந்து, ஆறு முதல் எட்டு வாரங்களாக உயர்த்தப்பட்டுஉள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி