9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2021

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்.


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிபிஎஸ்இ ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை சார்பில் விழா நடைபெற்றது.

விழாவின்போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டியிடும் மனப்பான்மையை பாதிக்கும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மாற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே பள்ளிகள் நிதிச்சுமையால் தவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பால் மாணவர்கள் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்த முன்வர மாட்டார்கள். இதனால் பள்ளிகள் மேலும் பல பாதிப்புகளை சந்திக்கும். தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஆலோசனை குழுக்களை அமைத்து அதில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்த்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் டி.சி.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. Half salary private teachers vaangum pothu enga ponathu unga thaniyar palli sangam.ipadiku bathika patta thaniyar palli teachers.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான கேள்வி

      Delete
    2. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது.

      Delete
  2. Private school rompa aniyam pandreenka da

    ReplyDelete
  3. தனியார்ப்பள்ளி நிர்வாகிகளைக் குறிப்பிட " தனியார்ப்பள்ளி நிர்வாகிகள் அல்லது தனியார்ப்பள்ளி நிர்வாகம் " என்று குறிப்பிடுங்கள். தனியார்ப்பள்ளி ஆசிரியர்கைப் ெருத்தவரை அவர்களை அரசு சாரா ஆசிரியர்கள் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். தனியார் பள்ளி நிர்வாகங்கள் செய்யும் தகிடுதித்தங்கள் தனியார் பள்ளி ஆசிரியரும் செய்வதாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறது. அது அவ்வாறு இல்லை. பள்ளி நிர்வாகம் கொடுக்கும் வேலையைத்தான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் செய்கிறார். உத்தரவு நிர்வாகத்திடம் இருந்து தான் வருகிறது. அப்படி இருக்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் செய்யும் எதுவும் தனியார் பள்ளி ஆசிரியருக்கு பொருந்தாது. எனவே அவர்களை தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்று அழைக்காமல், அரசு சாரா ஆசிரியர்கள் என்று அழைக்கலாம் அவர்களுக்கு என்று அரசு சாரா ஆசிரியர் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கலாம் அதில் தனியார் பள்ளி நிர்வாகிகள் எவரும் இல்லாமல் தூய அந்த அரசு சாரா ஆசிரியர்கள் குழுமம் மட்டும் இணைந்து செயல்படட்டும். நாளை இந்த கல்விச் செயல்பாடுகள் குறித்த எந்த ஒரு முடிவை அரசு எடுப்பதாக இருந்தாலும் இந்த அரசு சாரா ஆசிரியர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளும் அதில் பங்கேற்க வேண்டும் அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையிலும் அரசின் கொள்கை முடிவுகள் அமையலாம். அப்படி இருந்தால்தான் அது எல்லாவற்றிலுமே சரியாக இருக்கும். ஏனென்றால் இந்த அரசு சாரா ஆசிரியர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து வருகிறார்கள் சமுதாயத்திற்கும் வெளியில் இருக்கிறார்கள் அவர்கள் சமுதாயத்தில் நடக்கும் களநிலவரங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அரசு ஆசிரியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கல்வி முடிவுகள் எடுக்கவேண்டிய கூட்டங்களை நடத்தினால் அரசு ஆசிரியர்கள் அவர்களுக்கு விடுமுறை வருவது போல சாதகமான முடிவை நோக்கி அந்த விவாதத்தை நகர்த்திச் செல்வார்கள். இதுவே அரசு சாரா ஆசிரியர்கள் அதில் பங்கேற்றால் கொள்கை முடிவுகள் யாருக்கும் பாதகமில்லாமல் அமைய வாய்ப்பிருக்கிறது. கல்வியாளர்கள் கல்வியாளர்கள் என்று சொல்கிறார்களே எதற்கெடுத்தாலும் கல்வியாளர்களை கலந்து ஆலோசித்து அரசு முடிவு எடுத்தது என்று சொல்கிறார்களே அப்படிப்பட்ட அந்த கல்வியாளர்கள் யார் என்றுதான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  4. Unmaya sollanum na fees return panna valikuthu Pvt ku adhaa exam exam nu adichi kranga salary olunga kudukratha neengala pesa thaguthi illa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி