பொதுத்தேர்வு அடிப்படையில் வினாத்தாள்: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2021

பொதுத்தேர்வு அடிப்படையில் வினாத்தாள்: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.  


அதாவது  தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11- ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த மாதம் அறிவித்து இருந்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.


இதனை அடுத்து 11- ம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில், பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.  ஏப்ரல் 15-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேர்வுகள் நடத்துவதை உறுதி செய்ய மாவட்ட பள்ளி கல்வி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அடிப்படையில் வினாத்தாள்களை தயார் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை அறியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி