தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2021

தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை!

 


தென்காசி கல்வி மாவட்டம் , கீழப்பாவூர் சரகம் பள்ளி ஆசிரியை  தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெளியானதைத் தொடர்ந்து , தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொலைபேசிச் செய்திக்கிணங்க ,  தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.பழனிநாடார் என்பார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேற்படி ஆசிரியை தன்னுடைய வாக்கை பதிவு செய்த விவரத்தை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் - ல் பதிவு செய்தது தமிழ்நாடு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் , அன்னாரை 28.03.2021 முதல் தற்காலிகப் பணிநீக்கம் செய்து , அதன் ஆணையை 3 நகல்களில் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் இவ்வலுவலகம் அனுப்பி வைத்திட சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர்க்கு உத்தரவு.


தகவலுக்காக :

 வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம்.

8 comments:

  1. திமுக வேண்டாம் போடா

    ReplyDelete
    Replies
    1. அடிமை அதிமுக‌-பாசிச‌ பாஜக‌ வேண்ட‌வே வேண்டாம் போடா...

      Delete
    2. அடிமை அதிமுக‌-பாசிச‌ பாஜக‌ வேண்ட‌வே வேண்டாம் போடா...

      Delete
    3. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

      Delete
  2. தேர்தல் விதிமுறை கூட அறியாத
    பேஸ்புக் ஆசிரியை...

    ReplyDelete
  3. Suspension offer withdraw due to wrong petition her posted vote stolen by someone

    ReplyDelete
  4. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி