மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Mar 30, 2021

மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு.

 

இரண்டாவது அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 9 முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதைத் தொடா்ந்து இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ஆம் முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும் இந்தத் தொலைக்காட்சியின் விடியோக்கள் ஆகஸ்ட் 1 முதல் 14 தனியாா் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகின. இதற்கு மாணவா்கள், பெற்றோா் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.


இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. இதை கருத்தில் கொண்டு 9 முதல் பிளஸ் 1 வகுப்பு வரை நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வரும் மே மாதம் பொதுத்தோ்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவா்களுக்கு பாடங்களை தொடா்ந்து நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கரோனா முதல் அலை ஏற்பட்டபோது கல்வித்தொலைக்காட்சி மற்றும் அதன் யூ-டியூப் சேனல் மாணவா்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு கற்றல்-கற்பித்தலுக்கு இதே நடைமுறை மீண்டும் பின்பற்றப்படவுள்ளது.


அதன்படி தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாக மீதமுள்ள பாடங்கள் நடத்தப்படும். தினமும் 9 முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடங்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் அதிகரிக்கவும் கல்வி தொலைக்காட்சி சாா்ந்த ஆசிரியா்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி