தேர்தலுக்காக ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக்கூடாது: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2021

தேர்தலுக்காக ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக்கூடாது: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

 


சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''மத்திய, மாநில அரசுகளின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவும் அளித்து வருகிறது.

அதேசயம், கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள், ஆசிரியர், அரசு ஊழியர்களால் எழுப்பப்பட்டு வரும் அச்சங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும், உயிரிழப்பு குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது.

கரோனா தடுப்பூசியின் உயிர் பாதுகாப்பு குறித்தும், மருந்தின் நம்பகத்தன்மை குறித்தும் அனைத்துத் தரப்பினரும் திருப்தி கொள்ளும் வகையில் விளக்கம் தரப்பட வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கட்டாயப்படுத்தக் கூடாது''.

இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி