பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் கட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2021

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் கட்

 


பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்கனவே பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நாட்களை மூன்று அரை நாட்களாக உயர்த்தி, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம், 7,700 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிப்ரவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் திருப்தியடையாத பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு, சென்னைக்கு வந்து, டி.பி.ஐ., வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.கடந்த மாதம், 2ம் தேதி முதல், 12ம் தேதி வரை இந்த போராட்டம் நடந்தது. 


இந்த போராட்ட நாட்களுக்கு, சம்பளத்தை பிடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு வாரம் நடந்த போராட்ட நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய, கருவூலத்துறைக்கு, பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியது.இந்த கடிதத்தின்படி, எட்டு நாட்கள் சம்பள பிடித்தம் செய்து, அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

16 comments:

  1. Yarumay nalla irruka matinga naga enna paavam seithoam solunga enga urimaiya thathu ketom last la.eamatram mattumay kidachu irruku ..enna solla ean ippidi...engaluku neethi kidaikka veandum again again naga poraduvom enga vote dmk ( thanipata karuthu)mattumay or engalapathi yar pesurangalo avangaluku

    ReplyDelete
    Replies
    1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
      PGTRB2021 COMMERCE & TNEB ACCOUNTANT Regular class starts on: 01-03-2021.

      Study materials Available.!

      COMMERCE,
      TNEB Accountant,
      English,
      Maths,
      Botany,
      Computer science

      Delete
  2. அரசின் அடக்கு முறையை கண்டு அஞ்ச வேண்டாம் தோழர்களே.. நம் குடும்பத்தோடு தெருவில் பிச்சை எடுக்கும் வரை போராடுவோம்..

    ReplyDelete
    Replies
    1. Pitcha edutha kuda paravala nu solringalae ungaluku asingama illa. Nenga padicha thu ivalo thana? Ungala mathuri teacher ah nampi nangq epadi govt scl ku anupuvom. Salary tharalana job thuki potu private la poi work pana vendiathu thana. Ipadi govt ah thongitu irukinga

      Delete
    2. Pitchai edupadhu thavaru illa edhukanga pitchai edukarom nu tha mukkiyam....future la pitchai eduka kuadathu nu tha ippa pitchai edukkum poratam

      Delete
    3. Ha ha nalla iruku sir unga sir niyayam. Neenga padicha padipu pitcha eduka than use aguthuna apadi patta kalvi muraiyae engaluku thevai illa. Life la pitcha eduthavathu vaalalam enra ninaipodu irukum teacher kita enga children epadi govt scl ah anupuvom???

      Delete
    4. Ungalai yaari govt scl ku pillaigalai anupa sonnadhu.. veena pona private scl ku anupi nasama ponga.

      Delete
    5. Veena Pona scl ku pasangala anupuna kuda ethavathu pani suyama vaala kathukuvan . But ungala mathuri kevalama pitcha edukura teacher kita anupuna avan life ae waste ah poidum. Poi inum nala pitchai edunga sir. Unha identiy ah kuda velila theria kudathuni payanthu unknown name la pitcha eduthavathu vaalanumnu engaluku avasiam illa

      Delete
  3. ஏற்கனவே மூன்று அரை நாள்தான் Sir

    ReplyDelete
  4. Kasta pattu patuchutu 5 varusama vellye ellama just one point LA miss pannitu vetla erukom ungaluku varathil 3 nall athuvum half a day..private LA 12 hours for one day working monthly 6000 salary ethu pathathunu exams azhuthama permanent vera panna solrenga ungala year poga sonna velly ventana vettuku ponga engalamathuri belly ellame Erik kura van taluk I vaippu kutuinga exam azhuthi permanent akunga

    ReplyDelete
  5. Part time teachers ungalukkellam vekkame illayaaaa

    ReplyDelete
  6. வெக்கமா... எந்த கடையில விக்கிறாய்ங்க.. கிலோ எவ்ளோ
    நாறவாயா..

    ReplyDelete
  7. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி