அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுப்பு? பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை - kalviseithi

Mar 10, 2021

அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுப்பு? பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை

அரசு பள்ளிகளில், சனிக்கிழமைகளில் வகுப்புகளை ரத்து செய்ய, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால், பள்ளிகள் திறக்கப்படாமல், 'ஆன்லைன்' வழி வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டன.புதிய கல்வி ஆண்டில், ஏழு மாதங்கள் வரை பள்ளிகள் செயல்படாததால், பள்ளிகள் திறக்கப்பட்டதும், வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.


பல மாதங்களாக ஓய்வு எடுத்து விட்டு, திடீரென ஆறு நாட்களும் வேலை செய்வதில், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சனிக்கிழமை மட்டும் விடுப்பு அளிக்கும்படி கோரி வந்தனர்.வரும் வாரங்களில் சனி, ஞாயிற்று கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதால், இந்த பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, சனிக்கிழமை விடுமுறை வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். விரைவில் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு வரலாம் என, கூறப்படுகிறது.

2 comments:

  1. அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுப்பு? பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை
    what about private sector? They are also human

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுப்பு? பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை
    Then what about the private sectors? They are also humans

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி