பகுதிநேர பயிற்றுநர்களது வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kalviseithi

Mar 4, 2021

பகுதிநேர பயிற்றுநர்களது வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , ஈரோடு மாவட்டம் பகுதிநேரப்பயிற்றுநர்களது மாத ஊதியமானது ரூ .7700 / - லிருந்து ரூ .10,000 / - ஆக உயர்த்தி வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்களுக்கு ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) வழங்கப்பட்டுள்ளது. எனவே பிப்ரவரி 2021 மாதம் முதல் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கான மாத ஊதியத்தினை ரூ .10,000 / - ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு பிப்ரவரி 2021 ம் மாதத்தில் 04.02.2021 முதல் 12.02.2021 வரை உள்ள தேதிகளில் பணிக்கு வராத நாட்களை போராட்ட காலமாக கருதி No work No Pay அடிப்படையில் ஊதியத்தினை பிடித்தம் செய்து மாவட்டத்திட்ட வங்கிக்கணக்கில் செலுத்திட பள்ளிமேலாண்மைக்குழு | தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.3 comments:

 1. ஆசிரியர்களின் தேவை தமிழக அரசுக்கு தேவை இல்லை என்பதை தெளிவாக கூறி விட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. தகுதி இல்லாத ஆசிரியர் பயிற்சி முடிக்காத போலி பகுதி நேர ஆசிரியர்களை பள்ளி கல்வி துறை பணி நீக்கம் செய்யாதது ஒரு ஏன்??

   தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்கள் தான் பள்ளி கல்வி துறைக்கு தேவையா??? தகுதி உடைய பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

   Delete
  2. சரியான கேள்வி

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி