கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு... மோசமான சூழ்நிலை நிலவுவதால் வேறு வழியே இல்லை என முதல்வர் எடியூரப்பா வேதனை!! - kalviseithi

Apr 26, 2021

கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு... மோசமான சூழ்நிலை நிலவுவதால் வேறு வழியே இல்லை என முதல்வர் எடியூரப்பா வேதனை!!

 


கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்திருக்கும் எடியூரப்பா, ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இன்று இரவு 9 மணி முதல் மே 10ம் தேதி வரைக்கும் மாநிலம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா கூறியதாவது, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் இயங்கும். அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கும் திறந்திருக்கும் தனியார், சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சூழ்நிலை முற்றிலும் சரியில்லை.டெல்லி, மும்பையை விட மோசமான சூழ்நிலை நிலவுவதால் வேறு வழியின்றி ஊரடங்கு அறிவிக்கிறோம். கர்நாடகாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி