ஆல் பாஸ் மாணவர்களுக்கு பிளஸ் 1 அட்மிஷன் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2021

ஆல் பாஸ் மாணவர்களுக்கு பிளஸ் 1 அட்மிஷன் துவக்கம்


பத்தாம் வகுப்புக்கு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண்ணே தெரியாமல், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.


தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 1 வரை அனைத்து மாணவர்களுக்கும் பொது தேர்வோ, ஆண்டு தேர்வோ நடத்தப்படவில்லை; அனைவருக்கும், ஆல் பாஸ் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகள் துவங்கி உள்ளன. பொது தேர்வு நடத்தாவிட்டாலும், பள்ளிகள் தனியாக சிறிய தேர்வு நடத்தி, மாணவர்களின் விருப்பங்களையும், கற்றல் திறன்களையும் அறிந்து வருகின்றனர்.எந்த பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற விபரம் கேட்கப்பட்டு, அதற்கேற்ற பாட பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன.


மதிப்பெண் ஆய்வுகடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. அப்போது, அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.நடப்புக் கல்வி ஆண்டில், ஒரு தேர்வு கூட நடத்தவில்லை. 


எனவே, கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் படித்த, 9ம் வகுப்பு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, சான்றிதழ் வழங்கலாம் என, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் யோசனை தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி