போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - kalviseithi

Apr 18, 2021

போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

 

அரக்கோணத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஷோபனா. இவர் கடந்த 1999ம் ஆண்டு காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதைதொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். 


இதையடுத்து அவரது மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்தது. இதையடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஷோபனா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழில் 22 ஆண்டுகளாக அரசு பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆசிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

8 comments:

 1. விளங்கிடும்... 22 வருஷ ஊதியம், ஒரு பணியிடம் எல்லாம் என்ன ஆகறது?
  அந்தம்மாவ விட்டுட்டு அப்பாயிண்ட்மெண்ட் போட்டவன தூக்குல போடனும். வேல கிடைக்காதவன் தூக்குல தான தொங்கறான்...

  ReplyDelete
 2. 22 varusam kudutha sambalam, setha sotthu ellame parimuthal pannanum, aayul thandanai kudukanum

  ReplyDelete
  Replies
  1. உயர் கல்வி மட்டும்தான் டூப்ளிகேட். அடிப்படை கல்வி +2, Teacher ட்ரைனிங் எல்லாம் genuine தான். HM ஆனது தான் பிரச்சனை.

   Delete
  2. உயர்நிலைக் கல்வி அல்ல. உயர்க்கல்வி சான்றிதழ் மட்டும்.

   Delete
 3. அரசாங்க‌ம் அனைத்து ஆசிரிய‌ர்க‌ள் ம‌ற்றும் அர‌சு ஊழிய‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளையும் விரைந்து உண்மைத்த‌ன்மையைக் க‌ண்ட‌றிய‌ வேண்டும்..இந்த‌ ந‌வீன‌ கால‌த்தில் இத்த‌கைய த‌வறுக‌ள் ந‌டைபெறுவ‌து மிக‌வும் அவ‌மான‌க‌ர‌மான‌து...
  வெட்க‌க்கேடான‌து...

  ReplyDelete
 4. எங்கள் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என பல பேர் வேலையில் உள்ளனர் என்ன செய்வது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி