பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் அனுப்புவது துவக்கம் - kalviseithi

Apr 18, 2021

பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் அனுப்புவது துவக்கம்

 பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணியை துவங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், நேற்று முன்தினம் துவங்கின. இதில், இரண்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 


இந்நிலையில், பொது தேர்வில் மாணவர்கள் பதில் எழுத வேண்டிய வெற்று விடைத்தாள்களை, மாவட்ட வாரியாக தேர்வு மையங்களுக்கு அனுப்ப, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு மையங்களின் பொறுப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், தங்கள் தேர்வு மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெற்று விடைத்தாள்கள் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்பு தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்க, தயார் செய்து வைக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி