பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிவு - மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம். - kalviseithi

Apr 22, 2021

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிவு - மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம்.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிகிறது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை அரசு தள்ளி வைத்துள்ளது.அதே நேரம், பொதுத் தேர்வுக்கு முந்தைய பொது செய்முறைத் தேர்வு திட்டமிட்ட படி, இந்த மாதம், 16ம் தேதிதுவங்கியது.


இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடத்தப்பட்டன. 7,000 பள்ளிகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் மாணவ - மாணவியர் இதில்பங்கேற்றனர்.இந்த செய்முறைத் தேர்வு இன்றுடன் முடிகிறது. 'இனி, மாணவ - மாணவியர் யாரும் பள்ளிகளுக்கு வர வேண்டாம். 'ஹால் டிக்கெட்' பெற்று, பொதுத் தேர்வுக்கு நேரடியாக வந்தால் போதும்.அதுவரை வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி