ஏப்ரல் 3, 5 உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு. - kalviseithi

Apr 2, 2021

ஏப்ரல் 3, 5 உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 03.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் 2021 பயிற்சி வகுப்புகள் அனைத்து நிலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 பயிற்சி மையங்களில் நடைபெறவுள்ளது.


01,04.2021 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பணிநியமன ஆணைகள் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சார்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணைகளைப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தவறாமல் 03.04.2021 அன்று பயிற்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ஏற்கனவே முதலிரண்டு பயிற்சிகளில் கலந்து கொண்ட இதர பணியாளர்கள் பயிற்சியில் வழங்கப்பட்ட அறிவுரைப்படி 05.04.2021 அன்று அவர்களுக்குரிய பயிற்சி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் தேர்தல் பணியினைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஐ மீறியதாகக் கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும்.


 பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாகவும் , தேர்தல் பணியில் கலந்து கொள்ள ஏதுவாகவும் 03.04.2021 மற்றும் 05.04.2021 ஆகிய நாட்களுக்கு தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் பார்வை / ( 1 ) இல் காணும் செயல்முறைகளின் படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.1 comment:

  1. Elaathayum thappa arivikira Thanjavur ceo ithayavathu correcta sonnare...Great

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி