அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60- ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு. - kalviseithi

Apr 29, 2021

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60- ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.

 


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60- ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


திருச்சியை சேர்ந்த பலமுரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்


முன்னதாக தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58- ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது.


அதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.


இந்த நிலையில், திருச்சி  துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியவதாவது, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை.


மேலும் கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் என அவர் தெரிவித்து இருந்தார்.


இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு , தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

6 comments:

 1. Replies
  1. Kalvisethi la podara news i apadiye padichi kaamikariyee unakku vekkama illa.... Own ah news i collect panni u tube la podanum... Summa mokka news ellam podatha pa...

   Delete
  2. க‌ல்விச் செய்தியில் ம‌ட்டுமே வ‌ந்த‌,ம‌ற்ற‌ வ‌லைத‌ள‌ங்க‌ளில் வ‌ராத‌ ஒரே ஒரு செய்தியைக் குறிப்பிட‌வும்..

   Delete
 2. PG TRB 2021
  Maths Coaching Classes

  Live Online classes &
  Test Series batch

  PG TRB Maths live online classes Recorded original video link:

  Press the link please
  Complex Analysis:
  https://youtu.be/oLBkxcLoqQc

  Algebra:
  https://youtu.be/rlJq106ejgg

  Magic Plus Coaching Center, Erode-1.
  For admission Contact:
  9976986679,
  6380727953

  ReplyDelete
 3. கனம் கோர்ட்டார் அவர்களே...
  நாக்கை பிடுங்கற மாதிரி கேட்டுடாதீங்க 😄😄😄

  ReplyDelete
 4. Gopi thoguthiyil Bed, Dted padichavanga illai polirukirathu

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி